திங்கள் கிழமை என்றால் கசப்பா… உங்களை உற்சாகப்படுத்தும் 5 விஷயங்கள்! #MondayMotivation

 

திங்கள் கிழமை என்றால் கசப்பா… உங்களை உற்சாகப்படுத்தும் 5 விஷயங்கள்! #MondayMotivation

சனி, ஞாயிறு ஆபிஸ் விடுமுறை. இரண்டு நாள்களும் ஊர்ச் சுற்றி மகிழ்ச்சியாக இருந்துவிட்டு திங்கள் கிழமை காலையில், ‘இன்னிக்கு ஆபிஸ் இருக்குல்ல’ என்ற நினைப்பே சோர்வைத் தந்துவிடும். இந்தக் கதையெல்லாம் லாக்டெளனுக்கு முன் நடந்தது. இப்போது பெரும்பாலனோர் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால், லேப் டாப்பைப் பயன்படுத்தாத நாளே விடுமுறை என்றாகி விட்டது. என்னதான் வொர்க் ஃப்ரம் ஹோமாக இருந்தாலும் திங்கள் கிழமை என்றால் மனசு டல்லாகி விடுகிறது பாஸ் என்பவர்களுக்காகவே ஐந்து விஷயங்கள்.

1. பேசலாம் வாங்க: லாக்டெளன் தொடங்கியதுமே ‘என் மனைவியிடம் பேச நேரம் கிடைத்திருக்குறது’ ‘என் கணவருடன் வீட்டுக் கதைகள் பேச இப்பதான் வாய்ப்பு கிடைச்சிருக்கு’ என்றெல்லாம் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டார்கள். (அந்த ஸ்டேட்டஸே பல வீடுகளில் புது சண்டைக்குக் காரணமானது வேறு கதை) ஆனால், லாக்டெளன் நீட்டித்துக்கொண்டே செல்ல செல்ல வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாவற்றையும் பேசியதைப் போல எண்ணம் வந்திருக்கும் பலருக்கும். எனவே, திங்கள் கிழமை வேலையை ஆரம்பித்தால் அலுவலக நண்பர்களிடம் புதிய விஷயங்களை உரையாடலாம். அதற்காகவாது உற்சாகமாக திங்களை வரவேற்கலாம்.

திங்கள் கிழமை என்றால் கசப்பா… உங்களை உற்சாகப்படுத்தும் 5 விஷயங்கள்! #MondayMotivation

2. காத்திருக்கும் மொக்கை ஜோக்ஸ்: சரி, ஆபிஸ் வேலையின் தொடக்கமே டீம் மீட்டிங்தானே… அங்கே உங்களுக்காகவே இரண்டு நாள்களாக மேனேஜர் யோசித்து வைத்த மொக்கை ஜோக்ஸ் காத்திருக்கின்றன. சக ஊழியர்களின் வலுகட்டாயமான சிரிப்பொலி பின்னணி இசையாகக் கேட்க மொக்கை ஜோக் கேட்க ரெடியாகுங்கள். முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். அப்பறம் பழகிடும் பாஸ்.

3. ரிலாக்ஸ் ஆக டென்ஷனாகுங்கள்: ஒரு டென்ஷனிலிருந்து ரிலாக்ஸாகும் அந்த நேரம் எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? ஆனால், அதற்கு முதலில் டென்ஷன் ஆகணுமே. அதற்காகத்தான் மேலதிகாரி ரெடியாக இருக்கிறார். வழக்கம்போல திட்டு வாங்குங்கள். டென்ஷனாகுங்கள். பிறகு ரிலாக்ஸாகுங்கள். உங்களுக்கு அந்த அழகான தருணத்தைத் தருவது நீங்கள் கசப்பு என ஒதுக்கும் திங்கள் கிழமைதானே. (என்ன ஒரு புத்திசாலித்தனம் என உங்கள் மைண்ட் வாய்ஸ் சொல்வது கேட்குது!)

திங்கள் கிழமை என்றால் கசப்பா… உங்களை உற்சாகப்படுத்தும் 5 விஷயங்கள்! #MondayMotivation

4. கெத்து காட்டுங்க: வீட்டு வேலைகளை ஏற்கெனவே செய்தாலும், வொர்க் ஃப்ர்ம் ஹோம் என்பதால் இன்னும் அதிகமாகியிருக்கும். அதிலிருந்து எஸ்கேப் ஆகவேண்டும் எனில், ‘இன்னும் ஒரு மணி நேரம் மீட்டிங். அது முடிந்ததும் இன்னொரு மீட்டிங்’ என வீட்டில் கெத்து காட்டுங்கள். ஆனால், அதை வீட்டில் உள்ளவர்கள் நம்பும்படி சொல்ல வேண்டியது உங்கள் சாமார்த்தியம்.

5. அப்டேட்டிலிருந்து தப்பித்தல்: ‘இன்னிக்குதான் லீவுனு தெரியும்… அதான் போன் பண்ணினேன். உங்க ஊர்ல கொரோனா எவ்வளவு? டிவியில ரொம்ப அதிகமா சொன்னாங்களே…’ என்று ஊரிலிருந்து வரும் போன் கால்களிலிருந்து தப்பிக்கலாம். குறிப்பாக அவர்கள் சொல்லும் கொரோனா அப்டேட் எந்த அரசு அதிகாரியிடமும் இருக்காது. அதிலிருந்து தப்பிக்க உங்களுக்கு உதவுவது திங்கள் கிழமைதானே… இதைப் பார்த்து நீங்கள் டல் ஆகலாமா?

அப்பறம் இன்னொன்று முக்கியமான ஒன்றை மறந்து விட்டோமே! ஆமா. ரொம்ப ரொம்ப முக்கியமானது. இன்னும் எட்டு நாளில் உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வர வேண்டுமானால், நீங்கள் திங்கள் கிழமைக்குச் சிரித்துக்கொண்டே வெல்கம் சொல்லித்தான் ஆகணும். என்ன எஸ்.எம்.எஸா? சம்பளம் உங்கள் அக்கவுண்டில் கிரெடிட் ஆகிவிட்டது என வருமே அந்த எஸ்.எம்.எஸ்.