கொரோனா பணிக்காக ரூ.1,20,000 நிதியுதவி அளித்த பிச்சைக்காரர்: நெகிழ்ச்சி சம்பவம்!

 

கொரோனா பணிக்காக  ரூ.1,20,000 நிதியுதவி அளித்த பிச்சைக்காரர்: நெகிழ்ச்சி சம்பவம்!

கொரோனா பணிக்கு பயன்படுத்துவதற்காக ரூ.1 லட்சத்துக்கு 20 ஆயிரம் பணத்தை மதுரையை சேர்ந்த பிச்சைக்காரர் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 5 மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு அரசுக்கும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பல தரப்பினர் அரசு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் 12 ஆவது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா பணிக்காக ரூ.10,000 பணத்தை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பணிக்காக  ரூ.1,20,000 நிதியுதவி அளித்த பிச்சைக்காரர்: நெகிழ்ச்சி சம்பவம்!

துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வேலை தேடி மும்பை சென்று, வேலை கிடைக்காததால் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு அவர் சொந்த ஊருக்கு திரும்பிய போது, அவரை உறவினர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள வில்லையாம். அதனால் பிச்சை எடுக்கும் பணத்தில், தனது தேவைக்கு போக மீது பணத்தில் பள்ளிகளுக்கு நாற்காலி, மேசைகள், குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். இதுவரை பூல் பாண்டியன் சுமார் 400 பள்ளிகளுக்கு மேல் உதவி செய்திருக்கிறாராம்.

கொரோனா பணிக்காக  ரூ.1,20,000 நிதியுதவி அளித்த பிச்சைக்காரர்: நெகிழ்ச்சி சம்பவம்!

இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மதுரை திரும்பிய அவர், தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த முகாமில் இருந்து கொண்டிருக்கையில் தான், தன்னிடம் இருந்த பணத்தை மாவட்ட ஆட்சியரை 12 முறை சந்தித்து ரூ.10,000 பணத்தை வழங்கியிருக்கிறார். தான் இவ்வாறு இருக்கும் சூழலிலும் மற்றவர்களுக்கு உதவும் மனம் படைத்த அவர், தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவதாக கூறினார். மேலும், தற்போது பேருந்து சேவை எல்லாம் தொடங்கிவிட்டதால் மீண்டும் வெளியூர் சென்று தனது சேவையை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.