புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு முன் எங்களிடம் ஆலோசிக்கவில்லை… பொங்கும் மம்தா பானர்ஜி அரசு

புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு முன் எங்களிடம் ஆலோசிக்கவில்லை… பொங்கும் மம்தா பானர்ஜி அரசு

2014 நாடாளுமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் புதிய கல்வி கொள்கை கொண்டு வருவோம் என பா.ஜ.க. வாக்குறுதி கொடுத்தது. அதன்படி, புதிய கல்வி கொள்கையை உருவாக்கும் பணியை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது. அண்மையில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு வழக்கம் போல் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு முன் எங்களிடம் ஆலோசிக்கவில்லை… பொங்கும் மம்தா பானர்ஜி அரசு

தற்போது, புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு முன் தங்களிடம் ஆலோசிக்கப்படவில்லை என மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மற்றவர்களுடன் கலந்துரையாடல்கள் நடந்து இருக்கலாம். ஆனால் மேற்கு வங்க அரசாங்கத்தை சேர்ந்த எவருடனும் அல்ல.

புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு முன் எங்களிடம் ஆலோசிக்கவில்லை… பொங்கும் மம்தா பானர்ஜி அரசு

எனக்கு தெரிந்தவரை, எதுவும் நடக்கவில்லை. பிரதமர் மோடியை பொறுத்தவரை ஒரு முறை கூட இல்லை. மேற்கு வங்கத்தை சேர்ந்த எவரும் கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாக இல்லை என நான் உறுதியாக கூற முடியும். தேசிய கல்வி கொள்கையின் வரைவு தீர்மானத்தில் எங்களது ஆலோசனைகள் சிலவற்றை தெரிவித்தோம் ஆனால் ஒன்றுமே விவாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.