நெல்லை வெள்ளத்துக்கு முன் -பின் : அதிர்ச்சி தரும் வைக்கும் போட்டோக்கள்!

 

நெல்லை வெள்ளத்துக்கு முன் -பின் : அதிர்ச்சி தரும் வைக்கும் போட்டோக்கள்!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்த்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை காலத்தில் பெய்யும் இந்த மழையால் பல வயல்களில் நெற்பயிர் நாசமாகி விட்டது. ஏனெனில், இப்போதுதான் பயிரில் நெல் முற்றத்தொடங்கும் காலம். சில வயல்களில் அறுவடைக்கே தயாராகி இருக்கும். இந்த நேரத்தில் பெய்யும் மழை விவசாயிகளில் நான்கு மாத உழைப்பையே விரயமாக்கி விடும்.

காவிரி டெல்டாவில் மட்டுமல்ல, தென் மாவட்டங்களிலும் மழை விட்டு வைக்க வில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக கடும் மழை பெய்து வருகிறது.

நெல்லை வெள்ளத்துக்கு முன் -பின் : அதிர்ச்சி தரும் வைக்கும் போட்டோக்கள்!

இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது நெல்லையை சுற்றியிருக்கும் அணைகளிலும் நீர் வரத்து அதிகமாகி விட்டது. மணித்தாறு, பாபநாசம், சேவரலாரு அணைகள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டி விட்டன.

தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றிலும் வரலாறு காணாத அளவுக்கு நீர் அதிகளவு செல்கிறது. இதனால், தாமிர பரணி ஆற்றின் இரு கரை பகுதியில் இருக்கும் மக்களுக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

என்ன நடவடிக்கை எடுத்தும் இயற்கை வயல்கள், காடுகள் சேதமடைவதைத் தடுக்கவே முடியாது என்பதே யதார்த்தம்.

நெல்லை வெள்ளத்துக்கு முன் -பின் : அதிர்ச்சி தரும் வைக்கும் போட்டோக்கள்!

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் உள்ள வடக்கு அரியநாயகிபுரம் எனும் கிராமத்தில் ஒரு வயலின் போட்டோ வெள்ளத்துக்கு முன் எடுக்கப்பட்டது. அதில் பயிர்கள் நன்கு வளர்ந்து பச்சை பசேல் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது.

நெல்லை வெள்ளத்துக்கு முன் -பின் : அதிர்ச்சி தரும் வைக்கும் போட்டோக்கள்!

அதே வயலை வெள்ளம் பாதித்த பிறகு எடுத்த போட்டோவும் பார்க்க கிடைத்தது. அதில் பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி அத்தனையும் நாசமாகி விட்டன. அந்த வயலில் உழைத்த விவசாயின் உழைப்பு வீணாகி விட்டன. இதனை எப்படி அந்த விவசாயி எதிர்கொள்வார் என்று யோசித்துப்பார்க்கவே முடியவில்லை.

இதற்கு நல்ல தீர்வை அரசிடமிருந்துதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.