அதிக சத்துக்கள் நிறைந்த ‘பீட்ரூட் வடை’ செய்முறை!

 

அதிக சத்துக்கள் நிறைந்த ‘பீட்ரூட் வடை’ செய்முறை!

மத்த எல்லா வடையை விட பீட்ரூட் வடை ரொம்ப ஆரோக்கியமானது. பீட்ரூட்ட சமையல் பண்ணி சாப்பிட பிடிக்காதவங்க இப்படி வடை பண்ணிசாப்பிடலாம். டேஸ்ட் மற்றும் சத்து இரண்டுமே சேர்ந்து கிடைக்கும்.

பெர்பக்ட்டான பீட்ரூட் வடை செய்ய சில டிப்ஸ்

எல்லா வடைக்கும் மாதிரி பருப்பை குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இல்லைனா அரைக்க கொஞ்ச கஷ்டமா இருக்கும், அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம். இரண்டாவதாக, பீட்ரூட் கூடுதலாக, சோளம், கேரட் மற்றும் வெங்காயம் இந்த மாதிரி கொஞ்சகாய்கறிகள் சேத்துக்கலாம். கடைசியாக, மிதமான சூட்டுல பீட்ரூட்டை கொஞ்சம் வறுக்க வேண்டும். இதனால வடை மொறுமொறுனு கிடைக்கும்.

அதிக சத்துக்கள் நிறைந்த ‘பீட்ரூட் வடை’ செய்முறை!

தேவையான பொருட்கள்:

½ கப் கடலைப்பருப்பு
½ கப் துவரம் பருப்பு
2 உலர்ந்த சிவப்பு மிளகாய்
1 கப் அரைத்த பீட்ரூட்,
நறுக்கிய வெங்காயம்,
3 டீஸ்பூன் கொத்தமல்லி
2 மிளகாய்,
½ தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
கறிவேப்பிலை
1 தேக்கரண்டி சீரகம்
பெருங்காயம்
¾ தேக்கரண்டி உப்பு
2 டீஸ்பூன் அரிசி மாவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் கிண்ணத்தில் ½ கப் கடலைப்பருப்பு
½ கப் துவரம் பருப்பு 2 மிளகாய்வத்தல் எடுத்துக் கொள்ளுங்கள்.
போதுமான தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தண்ணீர் முழுவதுமாக இறுக்கப்பட்டு பருப்பை வடிகட்டவும்.
இப்போது வடிகட்டிய பருப்பை மிக்சியில் போட்டு அரைக்கவும். பேஸ்டுடன் கலக்கவும்.
1 கப் பீட்ரூட், வெங்காயம், 3 டீஸ்பூன் கொத்தமல்லி, 2 மிளகாய், ½ தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட், சில கறிவேப்பிலை, 1 தேக்கரண்டி சீரகம்,பெருங்காயம் மற்றும் ¾ தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனுடம் 2 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து ஒரு மென்மையான மாவை தயாரிக்கவும்.இப்போது நமக்குவடை கலவை கிடைத்துவிட்டது. கலவையை சின்ன உருண்டைகளாக உருட்டி வடை தட்டவேண்டும்.சூடான எண்ணெயில் பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை சுடவும்.வடை ரெடி. சுவையோட ஆரோக்கியத்தையும் பெறுங்கள்.