கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? – பீலா ராஜேஷ் விளக்கம்

 

கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? – பீலா ராஜேஷ் விளக்கம்

சென்னையில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கில் ஊரடங்கு மற்றும் அதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பொது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பரவி வந்த கொரோனா தற்போது மருத்துவர்கள் மத்தியிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. அதை 10,000 படுக்கைகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 574 மாணவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? – பீலா ராஜேஷ் விளக்கம்

கடந்த ஆண்டு மருத்துவம் முடித்த முதுகலை மாணவர்கள் என்று தமிழகம் முழுவதும் மொத்தம் 1,563 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இதுவரை உயிரிழந்தவர்கள், எதனால் உயிரிழந்தார்கள் என்று ஆராய மருத்துவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதம், எண்ணிக்கை தொடர்பாக ஒவ்வொரு நாளும் அரசு வெளிப்படையாக தகவல்களை வெளியிட்டு வருகிறது. கோவிட் 19 வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதாக வெளிவரும் தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை” என தெரிவித்தார்