இப்படி இருந்தா மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்- பீலா ராஜேஷ்

 

இப்படி இருந்தா மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்- பீலா ராஜேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரதுறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்து இன்று மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், மருத்துவ பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

இப்படி இருந்தா மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்- பீலா ராஜேஷ்

தொடர்ந்து ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்டவையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன். கொரோனா மையம், பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளிட்டவை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் வழிமுறைகளை பின்பற்றி தடுப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உடனிருப்போர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வழிமுறைகள் பின்பற்றாமல் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும். மாநில எல்லையில் நடை பாதையாக வரும் கர்நாடகத்தவர்கள் இபாஸ் இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்” என தெரிவித்தார்.