“மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது”… வியாபாரியை எச்சரித்த வட்டாட்சியரால் பரபரப்பு!

 

“மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது”… வியாபாரியை எச்சரித்த வட்டாட்சியரால் பரபரப்பு!

திருப்பூர்

அவினாசி அருகே மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளரிடம், வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியராக இருப்பவர் சுப்பிரமணி. இவர் நேற்று முன்தினம் இரவு, அவிநாசி அடுத்த கானாங்குளம் பகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடை உரிமையாளர் வேலுசாமி என்பவரது வீட்டிற்கு திடீர் ஆய்வு சென்றிருந்தார். அப்போது, வேலுசாமியிடம் இனி மாட்டிறைச்சி விற்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

“மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது”… வியாபாரியை எச்சரித்த வட்டாட்சியரால் பரபரப்பு!

இதற்கு, வேலுசாமியும், அவரது உறவினர்களும், மாட்டிறைச்சி விற்க கூடாது என சட்டம் உள்ளதா? என்றும், அனைத்து பகுதிகளிலும் உள்ள மாட்டிறைச்சி கடைகளிலும், மாட்டிறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டால், தானும் விற்பனையை நிறுத்தி கொள்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, எங்கும் மாட்டிறைச்சி விற்கப்படுவதில்லை என்றும், இந்த பகுதியில் மட்டும் தான் புகார் வந்துள்ளதாக தெரிவித்த வட்டாட்சியர் சுப்பிரமணி, ஆகையால் மாட்டிறைச்சி விற்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

இது உரையாடல் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வைரலாக பரவி வருகிறது. இதனிடையே, வட்டாட்சியர் வாய்மொழியாக எச்சரிக்கை விடுத்தபோதும், அந்த பகுதியில் நேற்று வழக்கம்போல மாட்டிறைச்சி விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.