’நோ டச்சிங் எனிதிங்’ கிரிக்கெட்டர் அஸ்வின் மகள்களின் அழகு வீடியோ!

 

’நோ டச்சிங் எனிதிங்’ கிரிக்கெட்டர் அஸ்வின் மகள்களின் அழகு வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் பெளலர்களில் தனித்தன்மை கொண்டவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

சுழற்பந்து வீச்சில் இந்திய அணிக்கு என சிறப்பான பட்டியல் உண்டு. கடந்த பத்தாண்டுகளில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் புகழ்பெற்றவராகத் திகழ்பவர் அஸ்வின் ரவிச்சந்திரன்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமைக்கு உரியவர்.

’நோ டச்சிங் எனிதிங்’ கிரிக்கெட்டர் அஸ்வின் மகள்களின் அழகு வீடியோ!

தற்போதைய செய்தி அவரின் கிரிக்கெட் பற்றியது அல்ல. அவரின் செல்ல மகள்களைப் பற்றியது.

அஸ்வின் வெளியூர் கிளம்பியிருக்கிறார். இது கொரோனா காலம் என்பதால் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதால், அவரின் மகள்கள் செல்லமாக அறிவுரைகள் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

அஸ்வின் மகள்கள் மழலைக் குரலில் பேசுவதை அவரின் மனைவி ப்ரீத்தி வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது,

ஏற்கெனவே தூங்கும் அப்பாவை தங்கை எழுப்பும் வீடியோ வைரலானது நினைவில் இருக்கும். அந்த க்யூட் மகளின் வழி அனுப்பியதில் மகிழ்ச்சியோடு புறப்பட்டிருக்கிறார் அஸ்வின்.

மாஸ்க் மற்றும் பிளாஸ்டிக் திரையோடு அவர் ட்விட்டரில் போட்டோவைப் பதிவிட்டிருக்கிறார் அஸ்வின் ரவிச்சந்திரன்.