darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

Beauty Tips

மாதிரி படம்

உங்கள் முகமும் உடலும் எப்போதும் பொலிவாக இருக்கணுமா..? இதையெல்லாம் செய்யுங்க! 

இந்த மாதம் கிறிஸ்துமஸ், வருட கடைசிக்கு வந்தாச்சு இப்படியிருக்க இந்த காலகட்டத்தில் பார்ட்டிக்கு பிரின்ட்ஸ், பாமிலீஸ் எல்லாரும் இன்வைட்  பண்ணுவாங்க அப்போ உங்க முகத்தைபொலிவாக வைத்துக்...


 இயற்கை க்ரீம்

சரும பாதுகாப்பிற்கான இயற்கை க்ரீம் செய்முறை

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டிவி பார்த்துக் கொண்டே செய்யலாம்.  பாதங்கள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தின் கண்ணாடி. முகத்தை பராமரிக்கும் அளவிற்கு நாம் பாதங்களின் மேல் அக்கறை எடுத்...


கால் பாதங்கள்

பட்டுப் போன்ற பாதங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள்

பெரும்பாலான பெண்கள், அவர்களது முக அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகம் மட்டும் எப்போதும் பளிச்சென்று அழகாக இருந்தால் போதும் என்று அலட்சியமாய் உள்ள...

 முகம் ‘பளிச்’சென்று தெரியனுமா... பத்து விதமான மாம்பழ ஃபேஸ் பேக்...

மாம்பழத்தை பழங்களின் ராஜா என்று அழைப்பார்கள் அது ஏன் என்று நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா!? காரணம், மாம்பழத்தின் சுவை மட்டுமின்றி அதில் ஏராளமான நன்மைகளும் உண்டு! நமது சருமத்தை பாதுகாத்து அதை ‘பளிச்’சென்று  ஆக்கும். இப்போது மாம்பழத்தை பத்து விதமான ஃபேஸ் பேக்கில் எப்படி உபயோகிக்கலாம் என்று பார்ப்போம்…

mango


 
இப்போ எதுக்கு இப்படி பத்துவிதமான டிப்ஸ்ன்னு கேக்குறீங்களா..? இப்போதான் சீசன் ஆரம்பிச்சிருக்கு.செயற்கையா பழுக்க வைத்த மாம்பழமாக இல்லாமல் உங்கள் வீட்டில்,அல்லது இயற்கையாக பழுத்த பழமாக பார்த்து வாங்கி,இதை ட்ரை பண்ணிப் பாருங்க.
 
 
1. மாம்பழம் மற்றும் முல்தானி மெட்டி
 

தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு- 2 tsp
தயிர்- 1 tsp
முல்தானி மெட்டி- 3 tsp
 
ஒரு பாத்திரத்தில் மாம்பழச்சாறு,தயிர் மற்றும் முல்தானி மெட்டியை எடுத்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளவும்.பிறகு முகத்தில் பூசிக்கொண்டு பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.உங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்
 
2. மாம்பழம் மற்றும் அவகாடோ

 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு - 2 tsp
அவகாடோ- 2 tsp
தேன் - 2 tsp
 
இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் நன்கு கலக்கி முகத்தில் பூசிக் கொள்ளவும் 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்
 
3. மாம்பழம் மற்றும் ஓட்ஸ்

oats


 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு - 2 tsp
ஓட்ஸ் - 2 tsp
பாதாம் - 7 ( இரவு முழுவதும் ஊற வைக்கவும்)
பால் - 2 tsp
 
ஓட்ஸை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.இதை பாதாமுடன் சேர்க்க வேண்டும். முகத்தில் பூசிய பிறகு 15 நிமிடம் விட்டு வைத்து,குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
 
4. மாம்பழம் மற்றும் பன்னீர்
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு- 2 tsp
தயிர் - 2 tsp
பன்னீர் - 2 tsp
முல்தானி மெட்டி - 2 tsp
 
ஒரு பாத்திரத்தில் மாம்பழ சாறு பன்னீர் மற்றும் முல்தானிமெட்டியை சேர்த்துக் கொள்ளவும்.பேஸ்ட் பதத்தை அடைய தேவையான அளவு தயிரை சேர்த்துக் கொள்ளவும்.முகத்தில் பூசிய பிறகு பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.
 
5. மாம்பழம் மற்றும் முட்டை வெள்ளை
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு - 2 tbsp
ஒரு முட்டையின் வெள்ளை கரு
 
வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக் கொண்டு,மாம்பழச்சாறுடன் சேர்க்க வேண்டும். கண்களை மட்டும் விட்டுட்டு முகத்தில் பூசிக் கொள்ளவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை அந்த நீரினால் கழுவ வேண்டும்.
 
6. மாம்பழம் மற்றும் பால்
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு - 2 tsp
பால் - 2 tsp
 
ஒரு பாத்திரத்தில் மாம்பழ சாறு மற்றும் பாலை சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலக்கிக் கொள்ளவும்.பேஸ்ட்டை முகத்தில் பூசிக்கொண்டு,30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்
 
7. மாம்பழம் மற்றும் கோதுமை மாவு
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு - 2 tsp
கோதுமை மாவு - 2 tsp
தேன் - 1 tsp
 
மாம்பழச்சாறு கோதுமை மாவு மற்றும் தேனை நன்கு கலக்கிக் கொள்ளவும். பிறகு முகத்தில் பூசிக்கொள்ளவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளவும்.
 
8. மாம்பழம் மற்றும் கடலை மாவு
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு - 4 tbsp
கடலை மாவு - 2 tbsp
தேன் - 1 tsp
தயிர் - 2 tbsp
 
மாம்பழச்சாறு கடலை மாவு மற்றும் தேனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் பேஸ்ட் பதத்தை அடைய தயிரை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.முகத்தில் பூசிய பிறகு 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.
 
9. மாம்பழம் மற்றும் சர்க்கரை
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு - 2 tsp
சர்க்கரை - 1 tsp
பால் - 2 tsp
 
மாம்பழச்சாறு சர்க்கரை மற்றும் பாலை ஒரு பாத்திரத்தில் நன்கு கலக்கிக் கொள்ளவும் இதை முகத்தில்  5 நிமிடம் வரை நன்றாக தேய்த்துக் கொள்ளவும் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
10. மாம்பழம் மற்றும் ஜாதிக்காய் போடி
 
தேவையான  பொருட்கள்:
மாம்பழச்சாறு - 2 tbsp
இலவங்கப்பட்டை தூள் - 1/2 tsp
ஜாதிக்காய் தூள் - 1/2 tsp
 
முகத்தை முதலில் நன்கு கழுவிக் கொள்ளவும்.பிறகு மாம்பழச்சாறு லவங்க  பட்டை தூள் மற்றும் ஜாதிக்காய்த்தூளை நன்கு கலக்கிக் கொள்ளவும்,முகத்தில் பூசிய பிறகு 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளவும்.

Aarthi Mon, 05/13/2019 - 15:23
face pack mango Beauty Tips மாம்பழ ஃபேஸ் பேக் லைப்ஸ்டைல்

English Title

mango face pack for

News Order

0

Ticker

0 அழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க!

பொதுவாக எல்லோருக்குமே எப்போதும் ஃப்ரெஸ்ஸாக,அழகாக இருக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும்.அதற்காக மெனக்கிடாத ஆட்களே இருக்க முடியாது! அதற்காக விளம்பரங்களில் வரும் அழகு சாதனப் பொருட்களை பலரும் பயன் படுத்துகிறார்கள். பெரும்பாலும் விற்பனைக்கு வருகிற அழகு சாதனங்கள் எவ்வளவு தூரம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணும் என்று சொல்ல முடியாது.

சில பார்லர்களில் இயற்கையான முறைகளில் ஃபேஷியல் செய்வதுண்டு.அது உங்கள் முகத்தை அழகாக வைத்திருக்க உதவும்.ஆனால்,அதற்கு அதிக அளவின் பணமும்,நேரமும் ஒதுக்க வேண்டும்.அப்படி பார்லருக்கு போக வேண்டாம் என்று நினைப்பவர்கள்,வீட்டிலேயே பேஷியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

பால்
அரிசி மாவு
தேன்
பன்னீர்
தயிர்
மஞ்சள் தூள்
கடலை மாவு
எலுமிச்சைச் சாறு
செய்முறை:

1 ஸ்டெப் : முகத்தை cleanse செய்ய வேண்டும்.அதற்கு ஒரு பாத்திரத்தில் 2 tbsp பாலை எடுத்து ஒரு பஞ்சை அதில் நனைத்து உங்கள் முகத்தில் தடவ வேண்டும்  இரண்டு நிமிடதிற்கு அப்புறம் உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.

beauty

2 ஸ்டெப்: முகத்தை scrub செய்ய வேண்டும்.இதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,தேன் மற்றும் பன்னீரை எடுத்து நன்கு கலக்கவும்.பிறகு முகத்தில் நன்கு பூசி கொள்ளவும் பத்து நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவவேண்டும்.

 

beauty

3 ஸ்டெப் : முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் மஞ்சள் தூளை எடுத்து நன்கு கலக்கி முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

curd with turmeric

4 ஸ்டேட்: ஃபேஸ் பேக், ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மஞ்சள் தூள் தயிர் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறை எடுத்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி கொள்ளவும் இந்த பேஸ்ட்டை நன்கு முகத்தில் பூசிக் கொள்ளவும் 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.இந்த நான்கு ஸ்டெப் கழித்து உங்கள் முகம் பளபளவென்று மின்னுவதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க: உங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா...அசத்தலான 5 ஐடியா!

Aarthi Wed, 04/24/2019 - 11:03
facial face pack Beauty Tips பேஷியல் லைப்ஸ்டைல்

English Title

do u want to become beauty, then try this facial pack

News Order

0

Ticker

0 
beauty tips

உங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா...அசத்தலான 5 ஐடியா!

கோடை காலத்தில் பொதுவாகவே நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். அதை சரிசெய்வதற்காக அடிக்கடி பார்லருக்கு போக முடியாது. அப்படி போக நேரம் இருந்தாலும் கூடுதல் செலவு பிடிக்கும். இழந்த பொலி...


கோப்புப்படம்

கோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் "மோர்"!

உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகளுக்கு எதிராக இயற்கை நிவாரணியாக செயல்படும்


foot

பாத வெடிப்பை சரிசெய்து வழுவழுப்பான பளீச் பாதங்களை பெற இதோ சில எளிய வழிகள்!

சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.



kadukkai

தோல் சுருக்கம் நீங்கி இளமையான முகத்துக்கு பயன்தரும் கடுக்காய் பொடி

கடுக்காய் பொடி இது நம்ம நாட்டு மருந்துகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. இது மலம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பயன்படுகிறது



lips

உதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்!

நம் முகத்துக்கு அழகூட்டுவதில் உதடுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. சிவந்த உதடுகள் எப்போதும் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.


aloe vera

இளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.


beautytips

ஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்!!!

எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவ வேண்டும்


pedicure

அழகாக வேண்டுமா? பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்!

எப்படி முகம் மற்றவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே போல் மற்றவர்களின் கண்களுக்குப் படும்படியான கை மற்றும் கால்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக...



2018 TopTamilNews. All rights reserved.