அழகு, ஆரோக்கியம், முக்தி தரும் துலா ஸ்நானம்!

 

அழகு, ஆரோக்கியம், முக்தி தரும் துலா ஸ்நானம்!

புண்ணிய நதிகளின் சங்கமமான காவிரியில் துலா மாதத்தில் துலா ஸ்நானம் செய்தால், அழகு, ஆரோக்கியம், உடல்நலம், செல்வம், கல்வி, வலிமை, குழந்தைப்பேறு, முக்தி பேறு ஆகியவற்றை தருவதாகக் கருதப்படுகிறது.

அழகு, ஆரோக்கியம், முக்தி தரும் துலா ஸ்நானம்!

ஐப்பசி மாதம் அடைமழை காலம் மட்டுமல்ல. சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும் மாதமும் கூட. இம்மாத்திற்கு துலா மாதம் என்ற பெயருமுண்டு. புண்ணியம் சேர்க்கும் காவிரியில் புனித நீராடலுக்கு, மாதங்களிலேயே சிறப்பு மிகுந்த ஒன்றாக பார்க்கப்படும் மாதம் ஐப்பசி. இந்த மாதத்தில் மயிலாடுதுறையில் ஓடும் காவிரி படித்துறையில் மூழ்கி எழுந்தால், ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

அழகு, ஆரோக்கியம், முக்தி தரும் துலா ஸ்நானம்!

புனிதமான துலா மாதத்தில் அனைத்து நதிகளும், 63 கோடி புண்ணிய தீர்த்தங்கள் 14 லோகத்தில் இருந்து, பூலோகத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள குடகு மலையில் பிறந்து தமிழகத்தை வாழவைக்கும் தெய்வீக நதியான காவிரியில் சங்கமிப்பதாக ஐதீகம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த, இந்த மாதத்தில் காவிரியில் நீராடினால், புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய யோக பலன் கிடைப்பதோடு, அழகு, ஆரோக்கியம் , வலிமை கிடைக்கும். முக்தி பேறும் கிட்டும். அதுமட்டுமின்றி, ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுபவரையும் சேர்த்து அவரது தாயார் வழியில் ஏழு தலைமுறையினரும், தந்தை வழியில் ஏழு தலைமுறையினரும் வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அழகு, ஆரோக்கியம், முக்தி தரும் துலா ஸ்நானம்!

நீராடும் போது இரண்டு கைகளும் நிரம்ப பூக்களை எடுத்து காவிரிக்கு சமர்ப்பணம் செய்து பூலோக வைகுண்டத்தில் வாசம் செய்து வரும் ஸ்ரீரங்கநாதரை நினைத்து வழிபட வேண்டும். காவிரியில் நீராடி அனைத்து பலன்களையும் பெறுவோம்.

-வித்யா ராஜா