நடிகர் விஜய்க்கு வில்லனாகும் அவரது தந்தை

 

நடிகர் விஜய்க்கு வில்லனாகும் அவரது தந்தை

நெல்சன் டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் 65வது படம் ‘பீஸ்ட்’.இப்படம் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சி என வயக்கமான ஃபார்முலாவுடன் தயாராகி வருகிறது.

Image

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுவருகின்றன. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 22ஆம் தேதி டீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.

பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரை கமிட் செய்ய படக்குழுவினர் விரும்பியதாகவும், ஆனால் விஜய் ஓ.கே சொல்லாததால் குழப்பம் நீடித்துவருகிறது.