ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகள் மூடல் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகள் மூடல் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகள் மூடல் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

என்னென்ன கட்டுப்பாடுகள்:

  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதியில்லை
  • ஏற்கனவே அறிவித்தவாறு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும், திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும்.
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
  • விதிமுறைகளை பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
  • கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்