‘தமிழகத்தில் 144 தடை’ நாளை முதல் ஆக. 10ஆம் தேதி வரை ஊரடங்கு!

 

‘தமிழகத்தில் 144 தடை’ நாளை முதல் ஆக. 10ஆம் தேதி வரை ஊரடங்கு!

பெரம்பலூரில் நாளை முதல் வருகின்ற 10ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘தமிழகத்தில் 144 தடை’ நாளை முதல் ஆக. 10ஆம் தேதி வரை ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. அத்துடன் கொரோனா கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஊரடங்கு அமல்படுத்தலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘தமிழகத்தில் 144 தடை’ நாளை முதல் ஆக. 10ஆம் தேதி வரை ஊரடங்கு!

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர் பேரூராட்சி, லப்பைக்குடிகாடு பேரூராட்சி பகுதிகளில் நாளை முதல் வருகிற 10-ஆம் தேதி வரை 7 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் மருந்தகம், பால் ,காய்கறி கடை போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் வணிக நிறுவனங்கள் செயல்படும் 7 பகுதிகளில் நாளை முதல் ஆகஸ்ட் 10 வரை 144 தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.