Home லைப்ஸ்டைல் ஒரு பெண்ணுடன் ஆயுள் வரை உறவை மெய்ன்டெய்ன் செய்ய வேண்டுமா? - இதை பாலோ செய்யுங்கள்!

ஒரு பெண்ணுடன் ஆயுள் வரை உறவை மெய்ன்டெய்ன் செய்ய வேண்டுமா? – இதை பாலோ செய்யுங்கள்!

உலகத்திலேயே தீர்க்க முடியாத பிரச்னை ஒன்று இருக்குமெனில் அது ஆண், பெண்களுக்கிடையே நிலவும் உறவுச் சிக்கலே. ஒரு உறவை எவ்வாறு நீண்ட நாள்களுக்குத் தக்கவைத்துக் கொள்வது, அந்த உறவை எப்படி கொண்டுசெல்வது போன்ற கேள்விகளுக்கான விடையை பல தசாப்தங்களாகத் தேடிக்கொண்டே தான் இருக்கின்றனர். இங்கு உறவு என்பதை வேறு அர்த்ததில் புரிந்துகொள்ள வேண்டாம். காதல் தான் உறவு (relationship) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உறவைத் தக்கவைப்பதில் பெண்களைக் காட்டிலும் பெரும்பாலான ஆண்களை அதிகளவில் மெனக்கெடுகின்றனர். காரணம், தனக்கான ஆணை ஒரு பெண் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். சில பெண்கள் விதிவிலக்கு. இங்கு பெண்ணைக் கவர்வதற்கு ஒவ்வொரு ஆணும் மற்றொரு ஆணுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ போட்டிப் போடுக்கொண்டு தான் இருக்கிறான் (நீங்க நம்பலனாலும் அதான் நெசம்).

மனிதர்களின் உலகமே ஆண், பெண்ணைச் சுற்றியது தான். அதனால் தான் மேற்கூறிய கருத்து பிரதானமாகிறது. பெயர், புகழ், நல்ல வேலை, பணம் சம்பாரித்தல், அதிகாரத்தை அடைதல், ஆதிக்கத்தை நிறுவுதல் என இவையனைத்தின் அந்தமும் பெண்களைக் கவர்வதற்காகவே இருக்கும். இந்தப் போட்டி யாருடன் நடைபெறுகிறது, அதுவும் மற்றொரு ஆணுடன் தான். இந்தக் குணாதியசம் விலங்குகளிடமும் நீங்கள் காண முடியும். அதிலிருந்து வந்தவன் தான் மனிதனும்.

ஆகவே தான் பெண்ணுடனான உறவைத் தக்கவைப்பது அவ்வளவு எளிதான காரியமாக ஆணுக்கு வாய்க்கப்பெறவில்லை. அதனால் தான் ஒரு ஆணின் புற அழகு, அரவணைப்பு, அவனின் வளம் உள்ளிட்டவை முக்கியப் பங்குவகிக்கின்றன.

சினிமாக்கள் கொடுக்கும் கவர்ச்சியிலும் போலியாகக் காட்டப்படும் உணர்வுகளாலும் இதில் எதுவுமில்லாத ஆணைத் தேர்ந்தெடுப்பதும், ஆனால் இது எதுவும் வாழ்க்கைக்குப் போதாது என்று பெண்கள் அவர்களைத் தூக்கிப்போட்டு சாத்துவதும் உலகறிந்த ஒன்று (கல்லானாலும் கணவன் போன்ற டிரேட்மார்க் டயலாக்குகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்).

சரி அப்போ என்ன தான் பாஸ் செய்றது?

உங்கள் துணையுடன் அன்பாக (kindness) இருங்கள், உங்கள் உறவு ஆரோக்கியமாக ஆயுள் வரை நீடிக்கும் என்கிறது இங்கிலாந்திலுள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் ஆய்வு. கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீண்ட நாள்களுக்கு உறவு நீடிக்க தங்களது துணையிடமிருந்து (ஆண்களிடமிருந்து) அன்பை எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

இங்கு அன்பு என்பது பிக்பாஸ் அர்ச்சனா கூறிய அன்பல்ல. அது வேறு அன்பு. அதற்குள் நாம் போக வேண்டாம். இந்த அன்பு என்பது ஒரு பெண்ணை எப்போதும் பாதுகாப்பாக, அதாவது கம்போர்ட்டாக வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

அவர்களின் பேச்சுக்குச் செவி சாய்ப்பது, அவர்களின் நலனில் அக்கறை காட்டுவது தேவைப்படும் நேரம் உதவி செய்வது, எரிமலை போல் வெடித்துச் சிதறாமல் அனுசரனையுடன் நடந்துகொள்வது, அவர்கள் தீ போல எரிந்தாலும் பனி போல அதனை மடைமாற்றுவது என பெர்பெக்ட் ஜென்டில்மேன் போல் நடந்துகொண்டால் நீண்ட உறவில் இருக்க பெண்கள் ஆசைப்படுவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

”அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா… சொல்லு நம்புறியா. நம்புறேன் அக்கா நம்புறேன்… அன்பு தான் ஜெயிக்கும்” இது கேலிக்குரிய ஒன்றாகப் பார்த்தாலும் நிச்சயம் அன்பு தான் ஜெயிக்கும். அன்பைப் பிரதானப்படுத்தி ஆரோக்கியமான உறவை முன்னகர்த்திச் செல்லுங்கள் என்பதேயே ஆய்வின் முடிவு கூறுகிறது.

அப்போ மேல புற அழகு, பணம்னு சொன்னீங்க… அதெல்லாம் பொய்யா கோபால்னு கேக்காதீங்க… இங்க தான் ஒரு ட்வீஸ்ட்…

”இந்த மாதிரி அன்பும் இருக்கனும், ஆனால்…” பெண்கள், ஆனால் என்று இழுத்தாலே பெரிதாக வில்லங்கம் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆய்வில் பெரும்பாலோனோர் அன்பை செலக்ட் செய்திருந்தாலும், நல்ல ஹேண்ட்சமாக இருக்க வேண்டும், அதே சமயம் கை நிறைய சம்பாதிக்கவும் செய்யனும்; கூடவே அன்பு கொஞ்சம் தூக்கலா வேணும் என்று கேட்டிருக்கிறார்கள். (அன்பு மேல சவாரி செஞ்சது நல்லாருந்துச்சா, கீழ இறங்கு – சூர்யவம்சம் பிஜிஎம் போட்டுக்கொள்ளவும்)

அன்பை மட்டுமே வைத்துக்கொண்டு பொங்கலா கிண்ட முடியும்… போய் வேலையா பாருங்க பாஸ் என்பதே இங்கே அவர்கள் கூற விழையும் கருத்து. ஆகவே ஒரு பெண்ணைக் கவர வேண்டுமென்றால், அவருடன் நீண்ட நாள்களுக்கு வாழ வேண்டுமென்றால் உங்களுக்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் (வேலைக்குக் கூட இவ்ளோ தகுதிய வளர்த்தது இல்லையடா).

இல்லை ப்ரோ அது கஷ்டம் என்றால், கவலைப்படாதீர்கள். உங்களுக்கான ’மயக்கம் என்ன’ யாமினி வருவாள் என்ற பகல் கனவைக் காண நித்திரை கொள்ளுங்கள் (தோ கிலோமீட்டர் பையா தாத்தா கனவில் வருவார்).

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews