பீ கேர்புல்… குண்டுமழையோடு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்!

 

பீ கேர்புல்… குண்டுமழையோடு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்!

அமெரிக்கர்களைக் குறிவைத்து ஈரானைச் சேர்ந்த ஷியா போராளிக் குழுக்கள் அடிக்கடி வான்வழித் தாக்குதலை நிகழ்த்திவருகின்றன. இம்மாதத்தில் கூட ஈராக்கின் தன்னாட்சி பிரதேசமான குர்திசில் உள்ள இர்பில் நகரத்திற்கு அருகே ஈரானிய குழுக்கள் குண்டுவீசி தாக்குல் நடத்தினர்.

பீ கேர்புல்… குண்டுமழையோடு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்!

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு சிரியாவில் செயல்பட்டுவரும் ஈரானிய போராளிக் குழுக்களின் முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் தொடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வியாழக் கிழமை உத்தரவிட்டார். அதிபராகப் பதவியேற்று அவர் உத்தரவிடும் முதல் ராணுவ நடவடிக்கை இது.

பீ கேர்புல்… குண்டுமழையோடு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்!

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி இந்தத் தாக்குதல் நடைபெற்றது. அமெரிக்கா மற்றும் அதன் அதன் நட்பு நாடுகளைப் பாதுகாப்பதில் ஜோ பைடன் அரசு உறுதியாக இருக்கிறது. அமெரிக்க ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானின் ஆதரவு பெற்ற படைகளின் முகம்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் கிழக்கு சிரியாவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.

பீ கேர்புல்… குண்டுமழையோடு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்!

இதுகுறித்து அதிபர் பைடன் கூறுகையில், “ஈராக் தாக்குதலுக்கான பதிலடி தான் சிரிய தாக்குதல். ஈரான் தவறுசெய்துவிட்டு ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. கவனமாக இருங்கள். இதை நேரடி எச்சரிக்கையாகவே விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார். பைடனின் பத்திரிகை செயலாளர் பேசுகையில், “அமெரிக்காவுக்கோ, அதன் நட்பு நாடுகளுக்கோ பிரச்சினை என்றால் அவர் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்; அவர்களைக் காக்கும் பொருட்டு வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிடும் அனைத்து உரிமையும் அவருக்கு உண்டு; இதனை வலியுறுத்தவே இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது” என்றார்.