இறுதியாண்டு தவிர்த்து சட்டக் கல்லூரிகளில் ஆல் பாஸ்… பார் கவுன்சில் பரிந்துரை

 

இறுதியாண்டு தவிர்த்து சட்டக் கல்லூரிகளில் ஆல் பாஸ்… பார் கவுன்சில் பரிந்துரை

இறுதியாண்டு தவிர்த்து சட்டக் கல்லூரிகளில் ஆல் பாஸ்… பார் கவுன்சில் பரிந்துரை
சட்டக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கும்படி இந்திய பார் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

இறுதியாண்டு தவிர்த்து சட்டக் கல்லூரிகளில் ஆல் பாஸ்… பார் கவுன்சில் பரிந்துரைகொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளில் ஆண்டுத் தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது. தமிழ்நாடு, தெலங்கானாவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதேபோல் கல்லூரிகளிலும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இறுதியாண்டு தவிர்த்து சட்டக் கல்லூரிகளில் ஆல் பாஸ்… பார் கவுன்சில் பரிந்துரைஇந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள சட்ட பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு தேர்ச்சி அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்க இந்திய பார் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு, ஆன்லைனில் பிராஜெக்ட் ரிப்போர்ட் தாக்கல் செய்து போன்றவற்றை அனுமதிக்கலாம். வழக்கமான தேர்வுக்கு இணையாக திருப்தி தரக்கூடிய வகையில் தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே மாணவர்கள் தேர்ச்சி இருக்கும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.