சென்னை சேப்பாக்கத்தில் டி20 உலகக்கோப்பை தொடர்!

 

சென்னை சேப்பாக்கத்தில் டி20 உலகக்கோப்பை தொடர்!

இந்தியாவில் கொரோனா பரவலையும் தாண்டி ஐபிஎல் போட்டிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று பிசிசிஐ கறாராக அறிவித்தது. தற்போது அனைத்து வீரர்களும் பயோ பப்பிளில் இருக்கின்றனர். முன்னதாக ஒவ்வொரு வீரர்களுக்கும் தனித்தனியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று இல்லாத வீரர்கள் மட்டும் ஆட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் டி20 உலகக்கோப்பை தொடர்!

இச்சூழலில் இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரை எந்தெந்த மைதானங்களில் நடத்தலாம் என்பது குறித்த தகவலை பிசிசிஐ ஐசிசிக்கு அனுப்பியிருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தொடரை இந்தியா நடத்துகிறது. அதன்படி போட்டிகளை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது.

சென்னை சேப்பாக்கத்தில் டி20 உலகக்கோப்பை தொடர்!

16 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய ஒன்பது மைதானங்களில் நடத்தலாம் என பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் ஐசிசி போட்டிகளை இந்தியாவில் நடத்தலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இருப்பினும் இந்த மைதானங்களை ஐசிசி குழு நேரில் வந்து ஆய்வு செய்து அதன் பிறகு முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது.