பி.சி.சி.ஐ பொதுமேலாளர் சபா கரீம் திடீர் ராஜினாமா?

 

பி.சி.சி.ஐ பொதுமேலாளர் சபா கரீம் திடீர் ராஜினாமா?

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவின் பெரும் கேளிக்கை நிகழ்ச்சியாக இருப்பது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள்தாம். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் மிக துரிதமாக நடைபெற்றன. ஆனால், கொரோனா நோய்த் தொற்று சரியாக மார்ச் மாதம் தொடக்கத்திலிருந்து இந்தியாவில் அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எல்லோருக்குள்ளும் எழுந்தது. போட்டி நடத்துபவர்களும் போட்டிகள் ரத்து செய்யப்பட வில்லை என்பதாகவே கூறி வந்தனர். ரசிகர்கள் மைதானத்தில் திரண்டால் நோய்த் தொற்று அதன்மூலம் பரவக்கூடுமே என்று பேசப்பட்டது. அதனால் ரசிகர்கள் இல்லாமல் வீரர்கள் மட்டுமே ஆடும் விதமாக ஐபிஎல் போட்டி அமைக்கப்படும் என்பதாகவும் பேச்சுகள் உலவின ஆனால், கொரோனா நோயின் தாக்கமும் பரவல் வேகமும் ஐபிஎல் போட்டியைக் கைவிடச் செய்தது.

பி.சி.சி.ஐ பொதுமேலாளர் சபா கரீம் திடீர் ராஜினாமா?

இந்த நிலைமை ஐபிஎல் போட்டிக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து விளையாட திட்டமிட்டிருந்த எந்தப் போட்டியும் நடத்த முடியாமல் போய்விட்டது. கொரோனாவால் வணிகம், அலுவகங்கள் உள்ளிட்டவை மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கிரிக்கெட் வாரியம் அப்படியான எந்த மாற்று முயற்சியையும் மேற்கொள்ள வில்லை என்ற குற்றசாட்டு அவ்வப்போது பலரால் முன் வைக்கப்பட்டது. இதனை முன்னெடுக்க வேண்டிய பிசிசிஐயின் பொதுமேலாளர் சபா கரீம் தம் வேலையை முறையாகச் செய்ய வில்லை என்றும் பேச்சு எழுந்தது. இன்னும் சிலர் இந்த நேரத்தில் போட்டிகளை விடவும் வீரர்களின் பாதுக்காப்பே முக்கியம் என்றும் கூறினர்.

பி.சி.சி.ஐ பொதுமேலாளர் சபா கரீம் திடீர் ராஜினாமா?
saba karim : Image Credit: Google

இந்த நிலையில் பிசிசிஐயின் பொதுமேலாளரான சபா கரீம் தம் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை நிர்வாகிகளுக்கு அனுப்பினார் சபா கரீம். இது அவராக எடுத்த முடிவா இல்லை யாரேனும் அழுத்தம் கொடுத்ததால் எடுக்கப்பட்ட முடிவா என்பது தெரியவில்லை. சபா கரீம் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்தப் பதவியில் பொறுப்பு வகித்தார்.