பிசிசிஐயால் புறக்கணிக்கப்பட்ட நடராஜன்?

 

பிசிசிஐயால் புறக்கணிக்கப்பட்ட நடராஜன்?

இந்திய அணியில் ஆடும் முக்கிய வீரர்களுடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்யும். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படும் எனவும் பிசிசிஐ ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்,

கிரேடு ஏ, ஏ+, பி, சி என்று வெவ்வேறு வகையில் பிசிசிஐ ஒப்பந்தங்களை மேற்கொள்ளும். ஒருநாள், டெஸ்ட், டி 20 மூன்றிலும் தொடர்ந்து ஆடும் வீரர்களுக்கு ஏ+ ஒப்பந்தம் வழங்கப்படும். பும்ரா, ரோஹித், கோலிக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஏ+ பெறும் வீரர்கள் குறைந்த பட்சம் 7 கோடி ரூபாயை வருட வருமானமாக பெறுவார்கள். கிரேடு பி பிரிவில் சஹா, உமேஷ் யாதவ் புவனேஸ்வர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.3 கோடி வருமானம் கிடைக்கும். தமிழக வீரர் நடராஜன் தொடர்ந்து பார்மில் இருந்து வரும் நிலையில், அவருக்கு பிசிசிஐ அமைப்பு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. ஆனால் இதற்கு பின் எந்த விதமான புறக்கணிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது.

பிசிசிஐயால் புறக்கணிக்கப்பட்ட நடராஜன்?

இந்திய அணியில் பிசிசிஐ கான்ட்ராக்ட் பெற வேண்டும் என்றால் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் 10 டி 20 போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். நடராஜன் இரண்டு ஒருநாள், ஒரு டெஸ்ட், நான்கு டி 20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். இதனால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.