இந்திய வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ… ஏ கிரேடில் ஸ்மிருதி மந்தனா!

இந்திய வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ… ஏ கிரேடில் ஸ்மிருதி மந்தனா!

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஆண்டு ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலானது 2020 அக்டோபர் முதல் 2021 செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்கானது. மொத்தமாக 19 வீராங்கனைகளை ஒப்பந்தம் செய்துள்ளது. டி20 கேப்டன் ஹர்மனபிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ் ஆகிய மூவரும் ஏ கிரேடில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ… ஏ கிரேடில் ஸ்மிருதி மந்தனா!

ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனான மித்தாலி ராஜ், ஷபாலி வர்மா, ஜூலான் கோஸ்வாமி, தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் உள்ளிட்ட 10 வீராங்கனைகள் பி கிரேடில் இருக்கிறார்கள். இவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளத் தொகை அளிக்கப்படும். அதேபோல 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் சி கிரேடில் மான்சி ஜோஸி, ரிச்சா கோஸ், பூஜா வஸ்டிராகர், அருந்ததி ரெட்டி, பிரியா புனியா, ஹர்லின் தியோல் ஆகிய ஆறு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ… ஏ கிரேடில் ஸ்மிருதி மந்தனா!
பி கிரேட் வீராங்கனைகள்

இந்தப் பட்டியலில் இளம் வீராங்கனையான ஷபாலி வர்மா சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அவர் சி கிரேடிலிருந்து பி கிரேடுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். இந்திய வீராங்கனைகள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடவுள்ளனர்.