‘தமிழ்படம்’ சிவா பாணியில் ‘மரு’ வைத்து நாளை வெளியாகும் ‘இந்திய பப்ஜி’ – வெறியர்களே தெறிக்கவிட ரெடியா?

 

‘தமிழ்படம்’ சிவா பாணியில் ‘மரு’ வைத்து நாளை வெளியாகும் ‘இந்திய பப்ஜி’ – வெறியர்களே தெறிக்கவிட ரெடியா?

சிறுவர்கள், இளைஞர்களின் நாடித்துடிப்பாக விளங்கியது பப்ஜி கேம். விளையாட்டுப் பிரியர்களின் பெருவாரியான சாய்ஸாக பப்ஜி இருந்தது. சாப்பிட மறந்தாலும் பப்ஜியில் விளையாட மறக்க மாட்டார்கள். பப்ஜியால் பணம் முதல் உயிர் வரை இழந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பப்ஜி கேமை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது. பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி தடை செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு கேமர்களை தூக்கிவாரிப் போட்டது.

‘தமிழ்படம்’ சிவா பாணியில் ‘மரு’ வைத்து நாளை வெளியாகும் ‘இந்திய பப்ஜி’ – வெறியர்களே தெறிக்கவிட ரெடியா?

பப்ஜியை தவிர்த்து வேறு எந்த கேமையும் கனவில் கூட நினைத்திடாத அவர்களுக்கு மிகப்பெரிய ஷாக். இருந்தாலும் தொழில்நுட்ப அறிவு கொண்ட ஒருசிலர் vpn சேவையைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக விளையாடினர். சமீபத்தில் கூட போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் ஆபாச அர்ச்சனை டாக்சிக் மதன் இந்த முறையைப் பின்பற்றி தான் பப்ஜி கேமே விளையாடினார். ஆனாலும் ஏராளமானோர் அதிகாரப்பூர்வமாக விளையாடவே ஆசைப்பட்டனர்.

‘தமிழ்படம்’ சிவா பாணியில் ‘மரு’ வைத்து நாளை வெளியாகும் ‘இந்திய பப்ஜி’ – வெறியர்களே தெறிக்கவிட ரெடியா?

அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவிலேயே பப்ஜி போன்று FAU-G (The Fearless and United Guards) என்ற பெயரில் ஒரு கேமை nCore Games நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால் இது பெரும் வரவேற்பை பெற தவறவிட்டது. பப்ஜி கேம் கொடுத்த அனுபவத்தின் ஒரு சிறு துணுக்கை கூட FAU-G கேமால் கொடுக்க முடியவில்லை. இந்தியர்களுக்கு பப்ஜி எவ்வளவு முக்கியமோ அதைவிட பப்ஜி ஓனரான krafton -க்கு இந்திய சந்தை அவ்வளவு முக்கியமானது. ஏனென்றால் இந்தியா வளம் கொழிக்கும் சந்தை. அங்கே எதைப் போட்டாலும் கோடிகளில் வருமானம் அள்ளலாம்.

‘தமிழ்படம்’ சிவா பாணியில் ‘மரு’ வைத்து நாளை வெளியாகும் ‘இந்திய பப்ஜி’ – வெறியர்களே தெறிக்கவிட ரெடியா?

மீண்டும் இந்திய சந்தையில் கால்தடம் பதிக்க முடிவெடுத்தது. அதற்காக முழுக்க முழுக்க இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக பப்ஜி போன்ற ஒரு கேமே உருவாக்கியது. பப்ஜி மொபைல் கேமை போலவே தோற்றம் அளிக்கும் Battlegrounds Mobile India என்ற பெயரில் இந்தியாவில் வெளியிடுகிறது(“தமிழ்படம்” படத்தில் நடிகர் சிவா வில்லன்களை ஏமாற்ற மரு வைத்து வருவது போல). இந்த கேம் நாளை வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டீசரும் வெளியானதால் பப்ஜி பிரியர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர்.
ww.battlegroundsmobileindia.com என்ற வெப்சைட்டிலிருந்தும் நேரடியாக இந்த கேமின் APK அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல கூகுள் பிளே ஸ்டோரிலும் பதவிறக்கம் செய்து வெறியைத் தீர்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு ஆன்ட்ராய்ட் மொபைல்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆப்பிள் போன் பயனர்களுக்கும் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது.