பாட்டா இந்தியா நிகர லாபம் ரூ.29.47 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.4 வழங்க பரிந்துரை

 

பாட்டா இந்தியா நிகர லாபம் ரூ.29.47 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.4 வழங்க பரிந்துரை

பாட்டா இந்தியா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.29.47 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல காலணிகள் தயாரிப்பு நிறுவனமான பாட்டா இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பாட்டா இந்தியா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.29.47 கோடி ஈட்டியுள்ளது. இதுசென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.3 சதவீதம் குறைவாகும். 2020 மார்ச் காலாண்டில் பாட்டா இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.38.40 கோடியை ஈட்டியிருந்தது.

பாட்டா இந்தியா நிகர லாபம் ரூ.29.47 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.4 வழங்க பரிந்துரை
பாட்டா இந்தியா

பாட்டா இந்தியா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.589.90 கோடி ஈட்டியுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் பாட்டா இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.620.57 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் பாட்டா இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினம் 2.69 சதவீதம் சரிந்து ரூ.563.90 கோடியாக குறைந்துள்ளது.

பாட்டா இந்தியா நிகர லாபம் ரூ.29.47 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.4 வழங்க பரிந்துரை
பாட்டா இந்தியா

பாட்டா இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்ததகம் முடிவடைந்தபோது, பாட்டா இந்தியா நிறுவன பங்கின் விலை 4.96 சதவீதம் உயர்ந்து ரூ.1,634.95ஆக அதிகரித்தது.