உ.பி. பள்ளிகளின் தரத்தை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால்… வாங்க வந்து பாருங்க என பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 

உ.பி. பள்ளிகளின் தரத்தை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால்… வாங்க வந்து பாருங்க என பதிலடி கொடுத்த பா.ஜ.க.

உத்தர பிரதேச பள்ளிகளின் தரத்தை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மாநிலத்துக்கு வந்து பள்ளிகளை பாருங்க என்று அம்மாநில தொடக்க கல்வித்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் 2022ம் ஆண்டில் நடைபெற உள்ள அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும், டெல்லி பள்ளிகளையும், உத்தர பிரதேச பள்ளிகளையும் ஒப்பிட்டு உத்தர பிரதேச பள்ளிகளின் தரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்தார். கெஜ்ரிவாலின் விமர்சனத்துக்கு உத்தர பிரதேச தொடக்க கல்வித்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

உ.பி. பள்ளிகளின் தரத்தை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால்… வாங்க வந்து பாருங்க என பதிலடி கொடுத்த பா.ஜ.க.
உத்தர பிரதேச பள்ளி மாணவர்கள்

உத்தர பிரதேச தொடக்க கல்வித்துறை அமைச்சர் சதீஷ் திவேதி கூறியதாவது: டெல்லியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மொத்தம் 1,024 அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால் உத்தர பிரதேசத்தின் சின்ன மாவட்டத்தில் கூட 1 முதல் 8ம் வரையிலான அரசு பள்ளிகள் குறைந்தபட்சம் 2 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. 1,024 பள்ளிகளின் நிலையை 1.59 லட்சம் பள்ளிகளுடன் ஒப்பிடும் நபரின் புத்திசாலித்தனத்துக்கு மட்டுமே நான் பரிதாபப்பட முடியும்.

உ.பி. பள்ளிகளின் தரத்தை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால்… வாங்க வந்து பாருங்க என பதிலடி கொடுத்த பா.ஜ.க.
சதீஷ் திவேதி

சில பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் (டெல்லியில்) உள்ளன, அதுவும் டாடா, அதானி மற்றும் அம்பானி குழுமங்களின் உதவியால் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பள்ளியில் மட்டுமே நீச்சல் குளம் உள்ளது. டெல்லி அரசு அனைத்து பணத்தையும் விளம்பரத்துக்காக செலவிடுகிறது அனைத்து பள்ளிகளிலும் நீச்சல் குளம் இருப்பதாக வெளிப்படுத்துகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள பள்ளிகளை பார்வையிட வரும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது துணை முதல்வா மணிஷ் சிசோடியா ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கிறேன். அது (உத்தர பிரதேச பள்ளிகள்) அவர்களின் கண்களை திறக்கும். இந்த பிரச்சினையுடன் அவர்கள் உத்தர பிரதேச அரசியலுக்குள் நுழைய விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.