பசவராஜ் பொம்மையின் அசத்தலும் அதிரடியும்

 

பசவராஜ் பொம்மையின் அசத்தலும் அதிரடியும்

விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உயர்கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறோம் என்று தெரிவித்துள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை.

பசவராஜ் பொம்மையின் அசத்தலும் அதிரடியும்

கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் பசவராஜ் பொம்மை மேலும், சந்தியா சுரக்‌ஷா திட்டன் கீழ்ன் ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாய் ஆக உயர்த்த முடிவு செய்திருக் கிறோம், விதவை உதவித்தொகையை 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக உயர்த்த முடிவு செய்திருக்கிறோமென்று தெரிவித்துள்ளவர்,

வரும் நாட்களில் ஏழைகள் மற்றும் தலித் மக்கள், பெண்களுக்கு தேவையாக உதவிகளை செய்ய அரசு தயாராக இருக்கிறது என்று அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கும் பசவராஜ் பொம்மை, நான் அனைவரையும் அரவணைத்துச்செல்வேன். அதற்காக நான் ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக இருக்க மாட்டேன். மக்களுக்கு ஆதரவாக முடிவெடுக்கும் ரப்பர் ஸ்டாம்ப் ஆகத்தான் இருப்பேன் என்றும் அதிரடி காட்டியிருக்கிறார்.