“ஆண் குழந்தை இல்லாததால் அவமானம்” -திட்டிய கணவனால் குடும்பத்தில் நடந்த சோகம்

 

“ஆண் குழந்தை இல்லாததால் அவமானம்” -திட்டிய கணவனால் குடும்பத்தில் நடந்த சோகம்

இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற ஒரு பெண்ணை அவரின் கணவர் ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்காத காரணத்தால் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் சிங்கட் சாலையில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள் .அந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும் ,9 வயதில் இன்னொரு பெண் குழந்தையும் உள்ளது .இந்நிலையில் அந்த கணவனுக்கு ஆண் குழந்தை மீது கொள்ளை பிரியமாம் .தனக்கு கொல்லி வைக்க ஒரு ஆண் குழந்தையில்லையே என்ற ஏக்கம் அவரை வாட்டியது .இதனால் அவரிடம் கேட்பவருக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார் .ஆண் குழந்தையிருந்தால்தான் அவர்களின் உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்ற ஓரு தவறான எண்ணத்தில் தன்னுடைய மனைவியை ஆண் குழந்தை பெற்று தரவில்லை என்று திட்டி கொண்டேயிருந்தார் .
அந்த பெண்ணை அவரின் கணவர் மட்டுமல்ல ,அவரின் மாமியார் மற்றும் உறவினர்கள் அனைவருமே ஆண் வாரிசு இல்லை என்று திட்டியுள்ளார்கள் .இதனால் மனமுடைந்த அந்த பெண் தன்னுடைய சகோதரரிடம் தன்னுடைய கணவன் வீட்டார் ஆம்பள குழந்தை இல்லாததால் தன்னை திட்டி கொடுமை படுத்துவதாக கூறி புலம்பியுள்ளார் .அதற்கு மறுநாள் அந்த பெண் தன்னுடய வீட்டில் தூக்கு போட்டு இறந்தார் .இதனால் அந்த பெண்ணின் சகோதரர் அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய தங்கையின் மரணத்திற்க்கு அவரின் கணவன் வீட்டார் ஆம்பள குழந்தை இல்லை என்று திட்டியதுதான் காரணமென்று புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து முடிதிருத்தும் நிலையம் வைத்துள்ள இறந்த பெண்ணின் கணவரிடம் விசாரித்து வருகிறார்கள் .

“ஆண் குழந்தை இல்லாததால் அவமானம்” -திட்டிய கணவனால் குடும்பத்தில் நடந்த சோகம்