மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயங்கிய மன்மோகன் சிங்.. பராக் ஒபாமா தகவல்

 

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயங்கிய மன்மோகன் சிங்.. பராக் ஒபாமா தகவல்

மும்பையை தீவிரவாதிகள் தாக்கிய பின்னர் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க மன்மோகன் சிங் தயக்கம் காட்டினார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது வாழ்வில் நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வுகள் மற்றும் சந்தித்த உலக தலைவர்கள் குறித்து தி பிராமிஸ்ட் லேண்ட் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ராகுல் காந்தி குறித்து, ஈர்க்க ஆர்வமாக இருப்பார் ஆனால் ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெறுவதற்கான திறமை அல்லது வேட்கை இல்லை என்று ஒபாமா குறிப்பிட்டு உள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக கொந்தளித்தனர்.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயங்கிய மன்மோகன் சிங்.. பராக் ஒபாமா தகவல்
மன்மோகன் சிங்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ராகுல் காந்திக்கு அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்ற எண்ணத்தில்தான் மன்மோகன் சிங்கை சோனியா காந்தி பிரதமராக்கினார் என்று ஒபாமா அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகத்தின் ஒரு பகுதியில், சோனியா காந்தி மன்மோகன் சிங்கை துல்லியமாக பிரதமராக தேர்ந்தெடுத்தார் ஏனென்றால் வயதான சீக்கியருக்கு தேசிய அரசியல் பின்புலம் கிடையாது, தனது 40 வயது மகன் ராகுல் காந்திக்கு எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்கவில்லை.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயங்கிய மன்மோகன் சிங்.. பராக் ஒபாமா தகவல்
ராகுல் காந்தி, சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற அவர் (சோனியா காந்தி) தயாராக இருந்தார். அமெரிக்க அதிபரின் நினைவாக நடத்தப்பட்ட இரவு விருந்தின்போது, சோனியா காந்தி பேசியதை விட அதிகம் கேட்டு கொண்டு இருந்தார். கொள்கை விஷயங்கள் வரும்போது மன்மோகன் சிங்கிடம் அவற்றை ஒத்திவைப்பதில் கவனமாக இருந்தார். பெரும்பாலும் தனது மகனை நோக்கி உரையாடலை தூண்டினார். இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையை தீவிரவாதிகள் தாக்கிய பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடி கொடுக்க மன்மோகன் சிங் தயக்கம் காட்டினார், அது அரசியல் ரீதியாக அவருக்கு விலை உயர்ந்ததாக நிரூபிக்கப்பட்டது என்று ஒபாமா எழுதியுள்ளார்.