ஜூன் 1 முதல் நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும்! – பார் கவுன்சில் வலியுறுத்தல்

 

ஜூன் 1 முதல் நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும்! – பார் கவுன்சில் வலியுறுத்தல்

வருகிற ஜூன் 1ம் தேதி முதல் இந்தியா முழுக்க வழக்கம்போல் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

ஜூன் 1 முதல் நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும்! – பார் கவுன்சில் வலியுறுத்தல்இது தொடர்பாக இந்திய பார் கவுன்சில் தலைவர் எம்.கே.மிஸ்ரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இந்திய நீதிமன்றங்களில் 80 சதவிகித வழக்குகள் கீழ் நீதிமன்றங்களில் நடைபெறுகின்றன. இந்த வழக்குகளில் மேல் முறையீடு, திருத்தம், ரிட் பெட்டிஷன் உள்ளிட்டவை உயர், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படுகிறது. இதில் 10 சதவிகித வழக்குகள் மட்டுமே அவசரம் என்ற தகுதி உடையதாக உள்ளது. இந்த 10 சதவிகித வழக்குகளில் வெறும் 2 சதவிகிதம் தான் தற்போது பட்டியலிடப்படுகின்றன. இந்த 2 சதவிகித வழக்குகளும் மிக முக்கியமான, முன்னணி சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்காக உள்ளது.
இதனால் கையளவு மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே பலன் பெறுகின்றனர். 95 சதவிகிதத்துக்கும் அதிகமான வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் வழக்கு விசாரணை என்பது வெறும் கனவாகவே உள்ளது. 95 சதவிகித வழக்கறிஞர்களும் பணியின்றி, பொருளாதார உதவியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்தியாவில் நீதிமன்றங்கள் வருகிற ஜூன் 1ம் தேதி முதல் வழக்கமான முறையில் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.