பனியன் நிறுவன உரிமையாளர், பெண் ஊழியருடன் தற்கொலை!

 

பனியன் நிறுவன உரிமையாளர், பெண் ஊழியருடன் தற்கொலை!

திருப்பூர்

திருப்பூரில் பனியன் நிறுவன பெண் ஊழியருடன், உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்.பாலன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (38). திருமணமாகாத இவர், தாயார் அன்னலட்சுமியுடன் வசித்து வந்தார். மேலும், தனது வீட்டில் பனியன் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இங்கு விவேகானந்தா வீதியை சேர்ந்த கார்த்திகை செல்வன் என்பவரது மனைவி நிரோஷா (38), தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். பொதுமுடக்கம் காரணமாக 2 மாதங்களாக செயல்படாமல் இருந்த பனியன் நிறுவனம், ஊரடங்கு தளர்வினால் சில நாட்களுக்கு முன் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

பனியன் நிறுவன உரிமையாளர், பெண் ஊழியருடன் தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை தாயார் அன்னலட்சுமி வெளியே சென்ற நிலையில் வீட்டில் பிரேம்குமார் மட்டும் இருந்துள்ளார். அன்றிரவு அன்னலட்சுமி வீட்டிற்கு திரும்பியபோது முன்பக்க கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அன்னலட்சுமி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச்சென்று உள்ளே பார்த்தார். அப்போது, வீட்டில் பிரேம்குமாரும், நிரோஷாவும் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில் கிடந்தனர். தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த கார்த்திகை செல்வன், நிரோஷா தம்பதிக்கு, 2 குழந்தைகள் உள்ளதும், இவர்கள் கடந்த ஒராண்டுக்கு முன்பு வேலைக்காக திருப்பூர் வந்ததும் தெரியவந்தது. அப்போது, பனியன் நிறுவன உரிமையாளர் பிரேம்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.