தமிழக அரசை பாராட்டிய ஆளுநர்! எதற்கு தெரியுமா?

 

தமிழக அரசை பாராட்டிய ஆளுநர்! எதற்கு தெரியுமா?

சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “2020-ம் ஆண்டு கலாச்சார திருவிழாவை தொங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மகாத்மா காந்தி, நேரு, ராஜகோபாலாச்சாரி போன்றவர்களால் இந்திய கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக 1938-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது பாரதிய வித்யா பவன். கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் சென்னை மக்களின் அங்கம்.

தமிழக அரசை பாராட்டிய ஆளுநர்! எதற்கு தெரியுமா?

எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எஸ். வசந்தகுமாரி, பட்டம்மா போன்ற மிகச்சிறந்த மேதைகளை கர்நாடக இசை நமக்கு வழங்கியுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த கலாச்சார திருவிழா தென்னிந்திய கலாச்சார திருவிழா. கர்நாடக இசை மன நிம்மதியை தரும். வளரும் கலைஞர்களுக்கு சென்னையில் நடைபெறும் கலாச்சார திருவிழா உதவிகரமாக உள்ளது. தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.