நாளை முதல் ‘இந்த நேரத்தில்’ மட்டும் தான் வங்கிகள் இயங்கும்!

 

நாளை முதல் ‘இந்த நேரத்தில்’ மட்டும் தான் வங்கிகள்  இயங்கும்!

கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் வங்கிகள் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 329 என அதிகரித்துள்ளது.அதேசமயம் கொரோனாவால் 80 பேர் ஒரே நாளில் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் மொத்தமாக உயிரிழப்பு 13 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது.

நாளை முதல் ‘இந்த நேரத்தில்’ மட்டும் தான் வங்கிகள்  இயங்கும்!

இந்நிலையில் தமிழகத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில பார்வையாளர்கள் குழுமம் நேரத்தை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது என மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ,கர்ப்பிணிகள், பார்வை குறைபாடு, மாற்றுத்திறன் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.