வங்கிகள் தனியார்மயம் ? நிர்மலா சீதாராமனின் அதிரடி அறிவிப்பு

 

வங்கிகள் தனியார்மயம் ? நிர்மலா சீதாராமனின் அதிரடி அறிவிப்பு

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தனியார்மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியல் நிதி ஆயோக்கிடம் சமர்பிக்கப்பட்டது. அந்த பட்டியலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆஃப் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கு நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

வங்கிகள் தனியார்மயம் ? நிர்மலா சீதாராமனின் அதிரடி அறிவிப்பு

இதனையடுத்து விசிக தலைவர் எம்.பி. திருமாவளவன் மற்றும் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என மனு அளித்தனர். அந்த மனுவில், செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐஓபி வங்கி ஆகிய்வற்றை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் எவற்றை தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக எம்.பிக்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் அளித்த மனுவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.