ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

 

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான பணிகளை அனைவரும் முன்கூட்டியே திட்டமிட வேண்டுமென வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மாதத்தின் முதல்நாளே விடுமுறையில் தொடங்குகிறது.

அதன்படி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 20 ஆம் தேதி மொஹரம், ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28 ஆம் தேதி 4வது சனிக்கிழமை, ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 30 ஆம் தேதி கிருஷ்ணஜெயந்தி. ஆகவே மேற்கண்ட 9 நாட்களுக்கும் வங்கிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.