• March
    31
    Tuesday

Main Area

Main



டெபிட் கார்டு வழங்குவதை நிறுத்திய வங்கிகள்! ஒரே ஆண்டில் 15 கோடி டெபிட் கார்டுகள் மாயம்.....

டெபிட் கார்டு
டெபிட் கார்டு

எவ்வளவு கோடி பணம் இருந்தாலும் அதனை தன் அட்டைக்குள் வைத்திருக்கும் டெபிட் கார்டு (ரொக்க அட்டை) புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு, டெபிட் கார்டு பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க தொடங்கியது. 208 நவம்பர் 3ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியது.

டெபிட் கார்டு மாதிரிகள்

ஆனால் அதற்கு அடுத்த ஓராண்டுக்குள் புழக்கத்தில் உள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 15 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது. 2019 அக்டோபர் நிலவரப்படி புழக்கத்தில் உள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 84.3 கோடியாக குறைந்தது. கடந்த 12 மாதங்களில் (2018 நவம்பர்-2019 அக்டோபர்) மட்டும் 15 கோடிக்கும் அதிகமான டெபிட் கார்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போய் விட்டது.

டெபிட் கார்டு பயன்பாடு

டெபிட் கார்டு எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கிய காரணமே, ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து, மேக்னடிக் ஸ்டிரிப் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை வங்கிகள் வழங்கியதுதான். இதனால் செயல்படாத வங்கி கணக்குகளுக்கு டெபிட் கார்டு வழங்குவது தவிர்க்கப்பட்டது. இதனால்தான் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 15.50 கோடி குறைந்துள்ளது. மாத சம்பளதாரர்கள் அடிக்கடி வேலை மாறுவதால் ஜீரோ பேலன்ஸ் சம்பள கணக்குகள் செயல்படாத கணக்குகளாக மாறி விடுகின்றன.

2018 TopTamilNews. All rights reserved.