வார விடுமுறையை தொடர்ந்து வருது…. வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்டிரைக்..

 

வார விடுமுறையை தொடர்ந்து வருது…. வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்டிரைக்..

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 15, 16ம் தேதிகளில் வங்கி பணியாளர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மத்திய அரசு சில பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை கண்டித்து 9 முக்கிய தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் திங்கள் (15) மற்றும் செவ்வாய் (16) ஆகிய தினங்களில் வங்கி சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

வார விடுமுறையை தொடர்ந்து வருது…. வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்டிரைக்..
வங்கி ஸ்டிரைக்

இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதால் மார்ச் 13 மற்றும் 14ம் தேதிகளில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தொடர்ச்சியாக வங்கி பணியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வங்கி பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்வது நல்லது. பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் வரும் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 தினங்கள் செயல்படாது.

வார விடுமுறையை தொடர்ந்து வருது…. வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்டிரைக்..
வங்கி (கோப்புப்படம்)

மார்ச் 13 இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 14 ஞாயிறு
மார்ச் 15 வங்கிகள் ஸ்டிரைக்
மார்ச் 16 வங்கிகள் ஸ்டிரைக்