திமுகவின் கோடீஸ்வர வேட்பாளரின் ரூ.198 கோடி சொத்துகளை ஏலம்விட்ட வங்கி – கரூரில் பரபரப்பு!

 

திமுகவின் கோடீஸ்வர வேட்பாளரின் ரூ.198 கோடி சொத்துகளை ஏலம்விட்ட வங்கி – கரூரில் பரபரப்பு!

திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக இருப்பவர் கரூரைச் சேர்ந்த கே.சி. பழனிசாமி. இவர் கரூரின் முன்னாள் எம்பியாகவும் அரவக்குறிச்சியின் முன்னாள் எம்எல்ஏவுமாகவும் இருந்திருக்கிறார். தொழிலதிபரான இவருக்கு கரூர், புதுச்சேரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தீவிர அரசியலில் இருக்கும் வரையிலும் நன்றாக தொழில் செய்துகொண்டிருந்தார் பழனிசாமி.

திமுகவின் கோடீஸ்வர வேட்பாளரின் ரூ.198 கோடி சொத்துகளை ஏலம்விட்ட வங்கி – கரூரில் பரபரப்பு!

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அரசியலிலும் நொடித்துப் போனார். தொழிலிலும் நொடித்துப் போனார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் உள்பட மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துகளை அடமானம் வைத்து வங்கிகளில் ரூ.200 கோடி வரை கடன் பெற்றிருந்தார். ஆனால் அதனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஸ்டேட் பாங்க் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள ரூ.197 கோடி மதிப்புள்ள பழனிசாமியின் சொத்துகளை விற்பனை செய்யும் அறிவிப்பை கோவை ஸ்டேட் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

திமுகவின் கோடீஸ்வர வேட்பாளரின் ரூ.198 கோடி சொத்துகளை ஏலம்விட்ட வங்கி – கரூரில் பரபரப்பு!

2004ஆம் ஆண்டு எம்பி தேர்தலில் வெற்றிபெற்று கரூர் எம்பியானார். 2009ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி அதிமுக பெரும்புள்ளி தம்பிதுரையிடம் வீழ்ந்தார். அப்போது இந்தியளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு காட்டி எம்பி வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு காட்டியதில் 2ஆவது இடத்தில் இருந்தார். அதற்குப் பிறகு 2011ஆம் ஆண்டு அரவக்குறிச்சியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்தது தொடர்பாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் அப்போது அதிமுகவிலிருந்து செந்தில்பாலாஜியிடம் தோல்வியடைந்தார்.