ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வங்கி சேவைக் கட்டணங்கள் உயர்வு!

 

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வங்கி சேவைக் கட்டணங்கள் உயர்வு!

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியுள்ளது. இந்தியாவில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதி விலக்கல்ல. ஜூலை 31-ம் தேதி வரை பொதுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் எங்கும் வேலைக்கும் செல்ல முடியாததால் கையில் காசு இல்லாமல் திணறிவருகின்றனர்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வங்கி சேவைக் கட்டணங்கள் உயர்வு!

இந்நிலையில் நாட்டின் சில வங்கிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன. அதன்படி மஹாராஷ்டிரா வங்கி (Bank of Maharashtra) ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவற்றில் குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் மாத சாரசரியை பராமரிக்கவில்லை என்றால், கட்டணம் விதிக்கப்படும் என்றும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கட்டணமும் உயர்த்தப்படும் என்றும் மேற்கண்ட இந்த வங்கிகள் அறிவித்துள்ளன.