வங்கிக்கடன் இ. எம். ஐ கட்ட ஓராண்டு அவகாசம் வழங்க கோரி சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்

 

வங்கிக்கடன் இ. எம். ஐ  கட்ட  ஓராண்டு அவகாசம் வழங்க கோரி சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்

வங்கிக்கடன் இ. எம். ஐ கட்டுவதற்கு ஓராண்டுகாலம் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பததை வலியுத்தி
ஈரோடு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியன் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியன் தலைவர் பாலு என்கிற மூன்று சுந்தரம் தலைமை தாங்கினார்.

வங்கிக்கடன் இ. எம். ஐ  கட்ட  ஓராண்டு அவகாசம் வழங்க கோரி சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகனங்களுக்கு பெறப்பட்டுள்ள கடன் தவணைகள் ( இ. எம். ஐ ) கட்டுவதற்கு ஓராண்டுகாலம் நீட்டிப்பு வழங்க வேண்டும். தவணை கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்ய கூடாது. வானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் வேக கட்டுப்பாடு கருவி எப்.சி. செய்து கொடுக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களின் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஓராண்டு காலம் வாகனங்களுக்கான காப்பீட்டை நீட்டிப்பு செய்து வழங்க வேண்டும். ஆண்டுக்கு இருமுறை டோல்கேட் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்கக்கூடாது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.