மக்களே உஷார் ஒரு வாரத்திற்கு வங்கிகள் செயல்படாது!

 

மக்களே உஷார் ஒரு வாரத்திற்கு வங்கிகள் செயல்படாது!

மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை வங்கிகள் சேவை தடைபடவிருக்கிறது. இந்த 9 நாட்களில் 7 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் ஏடிஎம்மில் பண பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த வாரம் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாமல் மக்கள் தட்டழிந்தனர். தற்போது தொடர்ச்சியாக ஒரு வாரம் விடுமுறை வரவிருப்பதால் அனைவரும் அதற்கேற்றவாறு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களே உஷார் ஒரு வாரத்திற்கு வங்கிகள் செயல்படாது!

என்னென்ன நாட்கள் எதற்காக விடுமுறை:

மார்ச் 27 – மாதத்தின் 4வது சனிக்கிழமை

மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை

மார்ச் 29 – ஹோலி விடுமுறை

மார்ச் 31- நிதியாண்டின் கடைசி நாள்

ஏப்ரல் 1 – வங்கிகள் வருடாந்திர கணக்குகளை முடிக்கும் நாள்

ஏப்ரல் 2 – புனித வெள்ளி

ஏப்ரல் 4 – ஞாயிற்றுகிழமை என்பதால் வங்கி விடுமுறை

மார்ச் 30, ஏப்ரல் 3 – இந்த இரு நாட்களில் மட்டுமே வங்கிகள் வழக்கம் போல செயல்படும்