கிரெடிட் கார்டு மூலம் நூதன முறையில் ரூ.10 லட்சம் மோசடி வங்கி ஊழியர் கைது – தனிப்படை போலீசார் நடவடிகை

கிரெடிட் கார்டு மூலம் நூதன முறையில் ரூ.10 லட்சம் மோசடி வங்கி ஊழியர் கைது – தனிப்படை போலீசார் நடவடிகை

சென்னை மாங்காடு அருகே கிரெடிட் கார்டு மூலம் நூதன முறையில் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி ஊழியரை போலீசார் கைதுசெய்தனர்.

மாங்காடு அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் இருதயராஜ்(55). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர், வடபழனியில் உள்ள தனியார் வங்கியில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது கிரெடிட் கார்டில் இருந்து மூன்று தவணைகளில் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக, அவரது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

கிரெடிட் கார்டு மூலம் நூதன முறையில் ரூ.10 லட்சம் மோசடி வங்கி ஊழியர் கைது – தனிப்படை போலீசார் நடவடிகை

அதிகளவு பணம் எடுக்கப்பட்டதால் சந்தேகமடைந்த வங்கி ஊழியர்கள் இதுகுறித்து இருதயராஜுக்கு தகவல் அளித்துள்ளனர். அப்போது தான் புதிய கிரெடிட் கார்டு வங்கவில்லை என்று கூறிய இருதயராஜ், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் மற்றும் மாங்காடு போலீசில் புகார் அளித்தார். அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்தியன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், இருதயராஜுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் அழைப்புகளை சோதனை மேற்கொண்டனர்.

கிரெடிட் கார்டு மூலம் நூதன முறையில் ரூ.10 லட்சம் மோசடி வங்கி ஊழியர் கைது – தனிப்படை போலீசார் நடவடிகை

இதில், இருதயராஜுக்கு தெரியாமலேயே அவரது கிரெடிட் கார்டு பிளாக் செய்யப்பட்டு, புதிய கிரெடிட் கார்டு வாங்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கோயம்பேட்டை சேர்ந்த வங்கி ஊழியர் கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். விசாரணையில், அவர் அதே வங்கியில் கஸ்டமர்கேர் பிரிவில் பணியாற்றியது தெரியவந்தது. மேலும், இருதயராஜிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது கார்டை பிளாக் செய்துவிட்டு, அவர் பெயரில் புதிய கார்டை விண்ணப்பித்துள்ளார். மேலும், வங்கியில் இருந்து அனுப்பட்ட கிரெடிட் கார்டை கொரியர் கொண்டு வரும் ஊழியர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொண்ட அவர், வங்கியில் இருந்து பேசுவது போன்று இருதயராஜிடமும், இருதயராஜ் பேசுவதாக வங்கி அதிகாரிகளிடமும் பேசி

கிரெடிட் கார்டு மூலம் நூதன முறையில் ரூ.10 லட்சம் மோசடி வங்கி ஊழியர் கைது – தனிப்படை போலீசார் நடவடிகை

கிரெடிட் கார்டின் ரகசிய எண்ணை தெரிந்துள்ளார். அதனை தொடர்ந்து நண்பர் ஒருவர் மூலம் வேறுவங்கியில் ஸ்வைப்பிங் மெஷினை வாங்கிய கார்த்திகேயன், அந்த பணத்தை எடுத்துள்ளார். ஆனால் சந்தேகத்தின் பேரில் வங்கி ஊழியர்கள் பணம், கார்த்திகேயன் கணக்கிற்கு பணம் செல்லாதவாறு தடுத்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது அவரது இருப்பிடத்தை அறிந்து போலீசார் கைதுசெய்தனர்.

கிரெடிட் கார்டு மூலம் நூதன முறையில் ரூ.10 லட்சம் மோசடி வங்கி ஊழியர் கைது – தனிப்படை போலீசார் நடவடிகை

மேலும், அவரிடம் இருந்து ஏராளமான கிரெடிட் கார்டுகள், ஸ்வைப் மெஷின், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கார்த்திகேயன் அணிந்திருந்த ஹெல்மெட் மற்றும் இருசக்கர வாகனம் குற்றவாளியை அடையாளம் காண உதவியதாக தெரிவித்துள்ள துணை ஆணையர் தீபா, அவரை கைதுசெய்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கவுரவித்தார்