வங்கி இ.எம்.ஐ: நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று ராமதாஸ் நம்பிக்கை

 

வங்கி இ.எம்.ஐ: நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று ராமதாஸ் நம்பிக்கை


வங்கிகளில் இ.எம்.ஐ தவணை ஒத்திவைப்புக்கு வட்டிக்கு மேல் வட்டி விதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை தீர்ப்பாக வழங்கும் என்று நம்புவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வங்கி இ.எம்.ஐ: நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று ராமதாஸ் நம்பிக்கை


கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் வேலை வாய்ப்பை இழந்த நிலையில் இ.எம்.ஐ வசூலிப்பதை சில மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது. ரிசர்வ் வங்கியும் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், ஒத்தி வைக்கப்படும் இ.எம்.ஐ-க்கு வட்டிக்கு மேல் வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன. மேலும், அவர்கள் விருப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே இ.எம்.ஐ ஒத்திவைப்பு

வங்கி இ.எம்.ஐ: நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று ராமதாஸ் நம்பிக்கை

வழங்கப்படுகிறது. அவர்களாக ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு இ.எம்.ஐ கட்ட வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உதவி செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளக் கூடாது என்று நீதிமன்றம் காட்டமாக கூறியது.

வங்கி இ.எம்.ஐ: நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று ராமதாஸ் நம்பிக்கை

இந்த நிலையில், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவைக் கைவிடப் போவது இல்லை என்று துளிகூட மனசாட்சி இன்றி மத்திய அரசு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


மத்திய அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடன்தாரர்களை பணம் காய்க்கும் மரமாக கருதாமல் அவர்களிடம் கருணை காட்ட வேண்டும்!
வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானதாகும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உறுதியளித்தவாறு வட்டியைத் தள்ளுபடி செய்யும் நல்ல முடிவை எடுத்துத் தீர்ப்பளிக்கும் என்று நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்.