பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை: வங்க தேச அரசு அதிரடி!

 

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை: வங்க தேச அரசு அதிரடி!

பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை வங்க தேச அரசு கொண்டு வந்துள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. குறிப்பாக பச்சிளங்குழந்தை முதல் வயதானவர்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் பதைபதைக்கச் செய்கிறது. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைப்பதோடு நிறுத்திவிடாமல், தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்பதே ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை: வங்க தேச அரசு அதிரடி!

இந்த நிலையில் வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா, பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்சமான தண்டனை மரணம் தான். இந்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர், பாலியல் குற்றங்களில் ஆயுள் தண்டனை பெறும் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வங்க தேசத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு இந்த அதிரடி சட்டத்தை இயற்றியிருக்கிறது. இது போன்ற சட்டங்கள் எல்லா நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.