Home விளையாட்டு கிரிக்கெட் சூப்பர் ஓவரில் பெங்களுர் வெற்றி ஓகே.. ஆனால்… கோலி? #IPL

சூப்பர் ஓவரில் பெங்களுர் வெற்றி ஓகே.. ஆனால்… கோலி? #IPL

ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு நாளும் கடைசி பந்து வரை சுவாரஸ்யமானதாக மாறி வருகிறது. நேற்று மும்பை இண்டியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியும் அப்படித்தான் ஆனது.

டாஸ் வின் பண்ணிய மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பவுலிங் என முடிவெடுத்தார்.

தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் ஓப்பனிங் இறங்கினார்கள். நிதானமான பேட்டிங் இந்த ஜோடி 81 ரன்கள் எடுத்திருந்தபோது 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த பின்ச் போல்ட் விசிய பந்தில் பொலார்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து இறங்கிய கேப்டன் கோலி 11 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது ராகுல் சாஹர் வீசிய பந்தில் ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் டி வில்லியர்ஸ், படிக்கல்லோடு ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக அடித்து ஆடினர்.

40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த படிக்கல் போல்ட் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷிவம் டுபே, டி வில்லியர்ஸ் ஜோடி பெங்களூர் அணி பவுலர்களை பிரித்து மேய்ந்தார்கள். 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்ட்ரியோடு 27 ரன்கள் குவித்தார். மறுமுனையில் டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரி என 55 ரன்களை விளாசியிருந்தார். இவர்களின் அதிரடியால் 201 எனும் பெரும் ஸ்கோரை அடித்தனர்.

மும்பை அணி பேட்டிங்கின் தொடக்கமே அதிர்ச்சி அளித்தது. ரோஹித் ஷர்மா 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்ற போது கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவர் இன்னும் 2 ரன்கள் எடுத்திருந்தால் ஐபிஎல் 5000 ரன்களை எடுத்திருக்கலாம். இன்னொரு ஓப்பனராக டி காக் 14, ஒன் டவுண் இறங்கிய சூர்யகுமார் 0 என வரிசையாக ஆட்டம் இழந்தனர்.

இஷான் கிஷான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைக்கும் விதமாக ஆடினார். ஹிர்திக் பாண்டியா 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பொல்லார்ட், கிஷானுடன் சரியாக ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். 58 பந்துகளில் 99 ரன்கள் அடித்து கிஷான், மும்பை பவுலர் உடானா பந்தில் அவுட்டானார். அவர் 9 சிக்ஸர், 2 பவுண்ட்ரிகளை விளாசியிருந்தார். அப்போதைய அணியின் நிலை 1 பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டும்.

மும்பை தோற்றுவிடும் என்ற நிலையை மாற்றியவர்கள் கிஷான் – பொல்லார்ட் ஜோடி.
ஆட்டத்தின் கடைசி பந்தில் பொல்லார்ட் அடித்த பந்து 4 ரன்களைப் பெற்றுத்தந்தது.

இதனால், ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கிச் சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய மும்பை, 7 ரன்களை மட்டுமே எடுத்தது. அதை எளிதாக எடுத்து வெற்றிப்பெற்றது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

பெங்களூர் பவுலிங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அபாரமாக வீசினார். 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். 13 டாட் பந்துகள். உடானா 2, சஹல் 1, ஜாம்பா 1, பும்ரா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பெங்களூர் அணி வென்றது. ஆனால், கோலி ஆட்டம் ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியில் 3, பஞ்சாப் அணியுடன் போட்டியில் 1 ரன், ஹைதராபாத் அணியோடு 14 ரன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். முக்கியமான கேட்ச்களை விடவும் செய்திருக்கிறார். கோலிக்கு கேப்டன் பொறுப்பு சுமையாக இருக்கிறது என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். அவருக்குப் பதில் ஆரோன் பின்ச்-யிடம் கேப்டன் பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழத்தொடங்கி விட்டன. அக்குரல்களை அடக்க, இந்த வெற்றி மட்டும் போதாது, கோலியின் ரன்களும் அவசியம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி...

காங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுக செய்தித்தொடர்பாளராக நியமனம்

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக...

தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: தேமுதிக மாநில செயலாளர் சுதீஷ்

கொரோனோ வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆம்பூர் தேமுதிக நகர செயலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆறுதல் கூறினார்
Do NOT follow this link or you will be banned from the site!