பெங்களூர் vs பஞ்சாப் – இன்றாவது கெயில் களம் இறங்குவாரா? #IPL #RCBvsKIXP

 

பெங்களூர் vs பஞ்சாப் – இன்றாவது கெயில் களம் இறங்குவாரா? #IPL #RCBvsKIXP

ஐபிஎல் தொடரில் நேற்று த்ரில் வெற்றியைப் பெற்றது டெல்லி கேப்பிட்டல் அணி. இன்றைய போட்டியில் ராயல்சேலஞர்ஸ் பெங்களுரை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

பெங்களூர் அணி 7 போட்டிகளில் ஆடி, 5-ல் வென்று 10 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, நெட் ரன்ரேட்டும் அதிகம் கிடைக்கும்பட்சத்தில் முதலிடத்தைப் பெற வாய்ப்பிருக்கிறது.

பெங்களூர் vs பஞ்சாப் – இன்றாவது கெயில் களம் இறங்குவாரா? #IPL #RCBvsKIXP

பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கிறது பஞ்சாப் அணி. 7 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வென்று, 2 புள்ளிகளோடு 8-ம் இடத்தில் உள்ளது. இன்று வென்றாலும் அதன் இடத்திலிருந்து முன்னேற வாய்ப்பில்லை. ஆனாலும், அடுத்த போட்டியில் வென்றால் முன்னேற முடியும் என்பதால் கடுமையாகப் போராடும்.

பஞ்சாப் அணி வென்ற ஒரே போட்டி, பெங்களுரை எதிர்த்து ஆடியபோதுதான். அந்தப் போட்டியில் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் 132 ரன்கள் குவித்தார். அணியின் ஸ்கோர் 206 என்று வியக்க வைத்தது. பெங்களூர் அணியோ 109 ரன்களில் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பிஷ்னொய், முருகன் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளைப் பறித்தனர்.

பெங்களூர் vs பஞ்சாப் – இன்றாவது கெயில் களம் இறங்குவாரா? #IPL #RCBvsKIXP

இதுவரை எந்த ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வென்றதில்லை பெங்களூர் டீம். இத்தனைக்கும் கோலி மூன்று ஆண்டுகளாக அதன் கேப்டனாக இருக்கிறார். ஆனால், இந்த சீசனில் தொடக்கம் முதலே தான் ரொம்ப ஸ்டார்ங்கான டீம் என்பதை தம் ஆட்டத்தின் மூலம் வெளிகாட்டி வருகிறது.

பெங்களூர் அணியில் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், விராட் கோலி, டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர் என நல்ல பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 73 ரன்கள் விளாசிய டி வில்லியர்ஸ் ஆட்டத்தை மறக்க முடியுமா?

பெங்களூர் vs பஞ்சாப் – இன்றாவது கெயில் களம் இறங்குவாரா? #IPL #RCBvsKIXP

பவுலிங்கிலும் சைனி, மோரிஸ், சஹல், வாஷிங்டன் சுந்தர், உடானா என எதிரணியை மிரட்டவும் ரன்களைக் கட்டுப்படுத்தவும் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை விழ்த்தவும் தயராக இருக்கிறார்கள்.

பெங்களூர் vs பஞ்சாப் – இன்றாவது கெயில் களம் இறங்குவாரா? #IPL #RCBvsKIXP

பஞ்சாப் அணியில் கே.எல். ராகுலைத் தவிர நிலைத்த ஆட்டத்தை மற்றவர்கள் வெளிப்படுத்துவதில்லை. மயங் அகர்வால், பூரண், மேக்ஸ்வெல் என பேட்டிங் ஆர்டர் நன்கு இருந்தும் வெற்றிக்கு ஆட யாருமில்லை.

பெங்களூர் vs பஞ்சாப் – இன்றாவது கெயில் களம் இறங்குவாரா? #IPL #RCBvsKIXP

இந்த அணியின் மாபெரும் தூண் கிறிஸ் கெயில் உடல்நிலை சரியில்லாததால் அணியில் சேர்க்கப்படாமல் இருக்கிறார். இன்று அவரின் உடல்நிலை சீராகி, அணிக்குத் திரும்பினால் பெரிய நம்பிக்கை கிடைக்கும். அவரும் கே.எல்.ராகுலும் ஓப்பனிங் இறங்கி, மயங் அகர்வாலை ஒன்டவுன் இறக்கி விடலாம். இன்றைய போட்டியில் பஞ்சாப் வெல்லும் எனும் நம்பிக்கையை கெயில் விளையாடினால் மட்டுமே ரசிகர்கள் பெறுவார்கள். கெயில் இறங்குவாரா என்பது இன்னும் சில மணிநேரத்தில் தெரிந்துவிடும்.

பவுலிங்கில் முகம்மது ஷமி, பிஷ்னொய் ஆகியோர் நம்பிக்கைக்கு உரியவர்கள். மற்றாவர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.