டெல்லி vs பெங்களூர் – முக்கியமான போட்டியில் பெங்களூர் பேட்டிங்

டெல்லி vs பெங்களூர் – முக்கியமான போட்டியில் பெங்களூர் பேட்டிங்

ஐபிஎல் திருவிழாவில் இன்று மோதிக்கொள்ளும் அணிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்.

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் இரண்டாம் இடத்தில் பெங்களூரும், மூன்றாம் இடத்தில் டெல்லியும் இருந்தாலும் இரண்டு அணிகளுமே 14 புள்ளிகளோடுதான் இருக்கின்றன. நேற்றைய போட்டி மூலம் கொல்கத்தாவும் 14 புள்ளிகளுடன் இவர்களோடு மல்லுக்கட்டுகிறது. எனவே இன்றைய போட்டியின் வெற்றியே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் விதத்தில் அமையும்.

டெல்லி vs பெங்களூர் – முக்கியமான போட்டியில் பெங்களூர் பேட்டிங்

இந்த இரு அணிகளுக்கான முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்றது. முதலில் ஆடிய டெல்லி 196 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அடுத்து ஆடிய பெங்களூர் அணியால் 137 ர்னகளையே எடுக்க முடிந்தது, அதுவும் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து.

டெல்லி vs பெங்களூர் – முக்கியமான போட்டியில் பெங்களூர் பேட்டிங்

இன்றைய போட்டியில் பெங்களூர் அதற்கு பழி வாங்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இரண்டு அணிகளும் கடந்த சில போட்டிகளாக தோல்வியையே சந்தித்து வருவதால், இம்முறை வெற்றி பெற வேண்டும் என இருவரும் முழு திறனை வெளிப்படுத்தி ஆடுவார்கள்.

டெல்லி vs பெங்களூர் – முக்கியமான போட்டியில் பெங்களூர் பேட்டிங்

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அதனால், பெங்களூர் டீம் பேட்டிங் ஆட தயாராகி வருகிறார்கள்.