பெங்களூரு ஊரடங்கு… ஓசூர் எல்லையில் குவிந்த தமிழர்கள்!

 

பெங்களூரு ஊரடங்கு… ஓசூர் எல்லையில் குவிந்த தமிழர்கள்!

பெங்களூருவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசித்து வந்த தமிழர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப ஓசூர் எல்லைக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெங்களூரு ஊரடங்கு… ஓசூர் எல்லையில் குவிந்த தமிழர்கள்!கர்நாடகாவில் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. பெங்களூரு நகரில் கொரோனா அதிகரிக்க ஆரம்பித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கை கொண்டு வர வேண்டும் என்று ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் முதலமைச்சர் எடியூரப்பா முழு ஊரடங்கு தேவையில்லை என்று உறுதியாக இருந்தார். தற்போது அங்கு தினமும் 1300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று இரவு 8 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

பெங்களூரு ஊரடங்கு… ஓசூர் எல்லையில் குவிந்த தமிழர்கள்!தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை என்பதால் பெங்களூருவில் வேலை பார்த்துவந்த தமிழர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முயற்சித்து வருகின்றனர். அதேபோல் கர்நாடகத்தின் மற்ற பகுதிகள், வேறுமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பெங்களூரூவை காலி செய்துவிட்டு தங்கள் சொந்த ஊர் திரும்ப முயன்று வருகின்றனர்.

பெங்களூரு ஊரடங்கு… ஓசூர் எல்லையில் குவிந்த தமிழர்கள்!தமிழகத்துக்குள் ஆயிரக் கணக்கான வாகனங்களில் மக்கள் நுழைய முயற்சித்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்கள் உரிய அனுமதியோடு தமிழகத்துக்கு வருகிறார்களா, இ-பாஸ் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால், பலரும் கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் எல்லைக்கு நடந்தே வருகின்றனர். ஷேர் ஆட்டோக்கள் அவர்களை அழைத்து வருகின்றன. பலரும் தமிழகத்துக்குள் வர முயற்சி செய்வதால் எல்லைப் பகுதியில் கொரோனா பதற்றம் நிலவுகிறது.