பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் 2020 தொடரில் 6வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் – பெங்களூர் அணிகள் களம் கண்டன. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. இதில் கேப்டன் ராகுல், 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் ஆடிய பெங்களூர் அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. இதை தொடர்ந்து கிங்ஸ் XI பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்த அந்த அணி பஞ்சாப் அணியிடம் படுதோல்வியைச் சந்தித்தது.

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.