நேதாஜியை வணங்குவதாக சொல்கின்றனர்.. ஆனால் திட்ட கமிஷனை ரத்து செய்தார்கள்.. மோடி அரசை தாக்கிய மம்தா

 

நேதாஜியை வணங்குவதாக சொல்கின்றனர்.. ஆனால் திட்ட கமிஷனை ரத்து செய்தார்கள்.. மோடி அரசை தாக்கிய மம்தா

நேதாஜியை வணங்குவதாக சொல்கிறார்கள் ஆனால் அவரால் திட்டமிடப்பட்ட திட்ட கமிஷனை ரத்து செய்தார்கள் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் சிறந்த சுதந்திர போராட்ட தலைவர்களில் மிகவும் முக்கியமானவா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆண்டு தோறும் ஜனவரி 23ம் தேதியன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் என்பதால் நேற்று அவரது பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:

நேதாஜியை வணங்குவதாக சொல்கின்றனர்.. ஆனால் திட்ட கமிஷனை ரத்து செய்தார்கள்.. மோடி அரசை தாக்கிய மம்தா
முதல்வர் மம்தா பானர்ஜி

நேதாஜியை போன்ற தேசபக்தர் யாரும் இல்லை. அவர் தேசிய கீதத்துக்காக தாகூரின் ஜன கன மண-வுக்கு ஒப்புதல் அளித்தார். அவர் ஜெய் ஹிந்த் கோஷத்தை வழங்கினார். நேதாஜி ஒரு சிறந்த தத்துவாதி. சுதந்திரத்துக்கு முன் அவர் திட்ட கமிஷனையும் இந்திய தேசிய இராணுவத்தையும் அவர் கற்பனை செய்தார். ஆனால் நேதாஜிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) நேதாஜியை வணங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் திட்டக் கமிஷனை ரத்து செய்தனர். ஏன் என்று எனக்கு தெரியவில்லை? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேச நாயகன் தினமாக கொண்டாடுவோம்.

நேதாஜியை வணங்குவதாக சொல்கின்றனர்.. ஆனால் திட்ட கமிஷனை ரத்து செய்தார்கள்.. மோடி அரசை தாக்கிய மம்தா
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இது சிறந்த வரலாற்றை அடிப்படையாக கொண்டது. ரவீந்தரநாத் தாகூர் நேதாஜியை தேச நாயகன் என்று உரையாற்றினார். நேதாஜியின் பிறந்த நாள் பற்றி தெரியும், ஆனால் அவரது மரணம் பற்றி எங்களுக்கு தெரியாது. இது மிகவும் வேதனையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திய திட்டக்குழு என்பது நாட்டின் ஐந்தாண்டு திட்டங்கள், ஆண்டு திட்டங்கள் முதலியவற்றை தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 1950ல் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு திட்டக்குழுவை கலைத்து விட்டு, நிதி ஆயோக்கை உருவாக்கியது. இதனைதான் மம்தா பானர்ஜி மேற்கோள் காட்டி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.