ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பழைய நகரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்.. பா.ஜ.க.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பழைய நகரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்.. பா.ஜ.க.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பழைய நகரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருக்கும் ரோஹிங்கியர்களை களையெடுப்போம் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு மாநகராட்சி தேர்தல் சட்டப்பேரவை தேர்தல் அளவுக்கு கட்சிகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. தற்போதைய சூழலில் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், டி.ஆர்.எஸ்., பா.ஜ.க. மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகிய 3 கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கர்நாடக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தீவிர பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பழைய நகரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்.. பா.ஜ.க.
பாண்டி சஞ்சய் குமார்

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பாண்டி சஞ்சய் குமார் பேசுகையில் கூறியதாவது: நான் ஏன் பாக்கியலெட்சுமி கோயிலுக்கு செல்கிறேன் என்று அவர்கள் கேட்கிறார்கள்? நான் அவர்களிடம் கேட்கிறேன் நான் ஏன் அங்கு செல்லக்கூடாது? நான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நான ஒரு சண்டையை ஆரம்பிப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பழைய நகரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம்.. பா.ஜ.க.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்

பாக்கியலெட்சுமி கோயில் பாகிஸ்தான்கீழ் உள்ளதா? அது உண்மையாக இருந்தால் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பழைய நகரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி ஹைதராபாத்திலிருந்து சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருக்கும் ரோஹிங்கியர்களை களையெடுப்போம். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்கியாவிலிருந்து வாக்காளர்கள் இல்லாமல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.