வட்டி வருவாய் அமோகம்… ஆனாலும் கொரோனாவால் பந்தன் பேங்க் லாபம் குறைந்தது

வட்டி வருவாய் அமோகம்… ஆனாலும் கொரோனாவால் பந்தன் பேங்க் லாபம் குறைந்தது

தனியார் வங்கியான பந்தன் பேங்க், கடந்த ஜூன் காலாண்டு (ஏப்ரல்-ஜூன்) காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் பந்தன் பேங்கின் நிகர லாபம் ரூ.549.80 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 31.5 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் பந்தன் பேங்க் நிகர லாபமாக ரூ.804 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் அமோகம்… ஆனாலும் கொரோனாவால் பந்தன் பேங்க் லாபம் குறைந்தது

2020 ஜூன் காலாண்டில் பந்தன் பேங்கின் நிகர வட்டி வருவாய் 15 சதவீதம் அதிகரித்து ரூ.1,811.52 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் வட்டி அல்லாத வருவாயும் 16.8 சதவீதம் உயர்ந்து 386.8 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டு இறுதி நிலவரப்படி, பந்தன் பேங்கின் நிகர வட்டி லாபவரம்பு 8.2 சதவீதமாக குறைந்துள்ளது.

வட்டி வருவாய் அமோகம்… ஆனாலும் கொரோனாவால் பந்தன் பேங்க் லாபம் குறைந்தது

பந்தன் பேங்க் கடந்த ஜூன் காலாணடில் திரட்டிய டெபாசிட் 35.3 சதவீதம் அதிகரித்து ரூ.60,610 கோடியாகவும், வழங்கிய கடன் 17.68 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.74,331 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வட்டி வருவாய் மற்றும் வட்டி அலலாத வருவாய் அதிகரித்துள்ளபோதிலும் பந்தன் பேங்கின் லாபம் குறைந்துள்ளது. நிலையான சொத்துக்கள் மீது கோவிட்-19 தொடர்பாக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்ததே இதற்கு முக்கிய காரணம்.